ரூ.9.50 லட்சம் பரிசு விழுந்ததாக நம்ப வைத்து ரூ.97,000 மோசடி

Added : மே 25, 2022 | |
Advertisement
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார் என்.வள்ளியனேந்தல் எல்.ஐ.சி., ஏஜன்ட் காரிசாமியிடம் 34, ரூ.9.50 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக நம்ப வைத்து ரூ. 97 ஆயிரத்து 700 மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள காரிசாமி பரமக்குடியில் எல்.ஐ.சி., ஏஜன்டாக பணிபுரிகிறார். இவர் ஆன்-லைன் விளம்பரம் ஒன்றை கவனித்து காலணி



ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார் என்.வள்ளியனேந்தல் எல்.ஐ.சி., ஏஜன்ட் காரிசாமியிடம் 34, ரூ.9.50 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக நம்ப வைத்து ரூ. 97 ஆயிரத்து 700 மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள காரிசாமி பரமக்குடியில் எல்.ஐ.சி., ஏஜன்டாக பணிபுரிகிறார்.

இவர் ஆன்-லைன் விளம்பரம் ஒன்றை கவனித்து காலணி மற்றும் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். பின் அந்நிறுவனத்தில் இருந்து காரிசாமிக்கு மே 16 தபால் வந்தது. அதிலிருந்த பரிசு கூப்பனை சுரண்டி பார்த்த போது ரூ.9.50 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.பரிசுத்தொகையை பெற சில விவரங்களை பூர்த்தி செய்து ஒரு வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு அனுப்பும்படியும் கூறினர்.

அதன்படி காரிசாமி அனைத்து விவரங்களையும் அனுப்பினார். மே 19 ல் அலைபேசியில் தொடர்பு கொண்டவர் பரிசுத்தொகை பெற டி.டி.எஸ். வரி கட்ட ரூ.9500 மற்றும் ஜி.எஸ்.டி.,க்கு ரூ.97,700 அனுப்ப கூறியதால் வங்கி கணக்கில் அனுப்பினார். ஆனால் பரிசுத்தொகை கிடைக்காததால் அலைபேசியை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் விசாரிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X