ராஜா குமரன் சேதுபதி மாரடைப்பால் மரணம்

Added : மே 25, 2022 | |
Advertisement
ராமநாதபுரம், : ராமநாதபுரம் சமஸ்தான ராஜா குமரன் சேதுபதி, 56, மாரடைப்பால் நேற்று காலை மரணம் அடைந்தார்.ராஜா குமரன் சேதுபதிக்கு மனைவி லக்குமி நாச்சியார், மகன் நாகேந்திர சேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியார் உள்ளனர்.மகாலட்சுமி நாச்சியாருக்கு பாளையம்பட்டி ஜமீன் வாரிசு அஸ்வின் என்ற பத்மராஜாவுடன் திருமணம் நடந்துள்ளது. அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.மறைந்த குமரன்


ராமநாதபுரம், : ராமநாதபுரம் சமஸ்தான ராஜா குமரன் சேதுபதி, 56, மாரடைப்பால் நேற்று காலை மரணம் அடைந்தார்.ராஜா குமரன் சேதுபதிக்கு மனைவி லக்குமி நாச்சியார், மகன் நாகேந்திர சேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியார் உள்ளனர்.மகாலட்சுமி நாச்சியாருக்கு பாளையம்பட்டி ஜமீன் வாரிசு அஸ்வின் என்ற பத்மராஜாவுடன் திருமணம் நடந்துள்ளது. அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.

மறைந்த குமரன் சேதுபதி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தக்காராகவும், மதுரை நான்காம் தமிழ் சங்கம், செந்தமிழ்கல்லுாரி தலைவராகவும் இருந்தார்.எட்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ராமநாதபுரம் அரண்மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X