பிரிட்டனில் ராகுலின் சந்திப்பு; பா.ஜ., தலைவர்கள் விமர்சனம்

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி : பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பினை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் சந்தித்து பேசியதை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றுள்ள காங்., - எம்.பி., ராகுல், அந்நாட்டின் தொழிலாளர் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜெர்மி கார்பினை சந்தித்து பேசினார். கடந்த 2015 - 20 வரையில் பிரிட்டன் பார்லி.,யில் எதிர்கட்சி தலைவராக இருந்த கார்பின்,
Congress, Rahul, Rahul Gandhi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பினை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் சந்தித்து பேசியதை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றுள்ள காங்., - எம்.பி., ராகுல், அந்நாட்டின் தொழிலாளர் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜெர்மி கார்பினை சந்தித்து பேசினார். கடந்த 2015 - 20 வரையில் பிரிட்டன் பார்லி.,யில் எதிர்கட்சி தலைவராக இருந்த கார்பின், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், கார்பின் - ராகுல் சந்திப்பு குறித்து பா.ஜ., தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ''சொந்த நாட்டுக்கு எதிராகவே ஒருவர் எத்தனை காலம் தன் செயல்படுவார்,'' என, பா.ஜ.,வை சேர்ந்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.


latest tamil news


பா.ஜ., பிரமுகர் கபில் மிஸ்ரா கூறுகையில், ''இந்தியா குறித்த ஜெர்மி கார்பினின் கருத்துடன் ராகுல் உடன்படுகிறாரா,'' என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த காங்., செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ''ஜெர்மி கார்பினை பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசியுள்ளார். அவரது கருத்துக்களுடன் மோடியும் உடன்படுகிறாரா என்பதை பா.ஜ., தலைவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
25-மே-202212:49:53 IST Report Abuse
Sridhar இந்தியாவுக்கு எதிராக ஏதாவது நாலு இடத்தில குண்டு வச்சு கலவரம் செய்து எதுனாச்சும் பண்ணி அது மூலம் ஆட்சியை பிடிச்சிரமுடியாதுங்கற ஏக்கம் இருக்கத்தானே செய்யும், பாவம்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-மே-202212:00:39 IST Report Abuse
M  Ramachandran இந்தியாவில் எம் பி பதவி கிடைப்பதில் சிக்கல் உள்ளதால் பிரிட்டனில் விலை கொடுத்து எம் பி பதவியியை வான்க பேச்சு வார்த்தையை நடத்தி உள்ளார்.நாடு துரோகி கள் எண்ணிக்கை பெருகி கொண்டு வருகிறது.இதற்கு ஒட்டு போட்ட கேரளா காரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-மே-202211:44:16 IST Report Abuse
raja எதிரிக்கு எதிரி நண்பன் என்ற திருட்டு திராவிட மாடலின் விதியை பின்பற்றுகிறான் இந்த பப்பு.... அதானால் இந்திய மக்களின் எதிரியாகவே மாறிப்போயிட்டான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X