72 மணி நேர கெடு முடிகிறது: பேரணிக்கு தயாராகிறது பா.ஜ.,

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (90) | |
Advertisement
'பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு, 72 மணி நேரத்துக்குள் குறைக்க வேண்டும். இல்லையென்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.அண்ணாமலை விதித்த, 72 மணி நேர கெடு, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நேற்று போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடந்தது.இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஆட்சிக்கு
BJP, Annamalai, Fuel Price, DMK, CM Stalin, MK Stalin, Stalin, அண்ணாமலை, ஸ்டாலின்

'பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு, 72 மணி நேரத்துக்குள் குறைக்க வேண்டும். இல்லையென்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

அண்ணாமலை விதித்த, 72 மணி நேர கெடு, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நேற்று போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடந்தது.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்ததும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையில் லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கப்படும் என, தி.மு.க.,வாக்குறுதி அளித்தது.ஆனால், பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் மட்டும் குறைத்து விட்டு, சலுகை வழங்கியது போல பீற்றி கொண்டனர்.டீசல் விலையில், ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றிவிட்டனர்.


latest tamil newsமத்திய அரசின் கலால் வரியை காட்டிலும், மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி தான்அதிகம். ஆனாலும், மாநில அரசு வரியை குறைக்காதாம். மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும், அடிப்படையான கலால் வரியில், எந்த மாறுதலும் செய்யவில்லை.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக மறைத்து விட்டு, தாங்கள் மட்டுமே உத்தமர்கள் போல் காட்டி கொள்ளும் தி.மு.க.,அரசு, போலி வேஷம் போடுகிறது. இதை மக்கள் புரிந்துள்ளனர்.

கெடு முடிந்த பின்னும் தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பட்சத்தில், அறிவித்தபடியே கோட்டையை நோக்கி, பா.ஜ., பேரணி நடக்கும்;முற்றுகை போராட்டமும் நடத்தப்படும்.அதற்கான ஏற்பாடுகளை, தமிழக பா.ஜ., துவங்கி விட்டது.

ஜூன் முதல் வாரத்தில், போராட்டம் நடத்ததீர்மானித்து உள்ளோம்.ஏற்கனவே, திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்ட முயன்ற அரசின் முயற்சிக்கு எதிராக, பா.ஜ., பிரம்மாண்ட போராட்டம் நடத்தியது. அதை விட, பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கிய பேரணி நடத்தப்படும். இவ்வாறு அவர்கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rameshkumar natarajan - kochi,இந்தியா
31-மே-202211:17:30 IST Report Abuse
rameshkumar natarajan If Tamil Nadu BJP president listen to TN Finance Minister's speech in most of the national media, he will not resort to this kind of agitation. He is doing this to show his presence. Price reduction will happen, since the RSP is on advoleram . If he cannot understand this, he should do his home work. Tn Government will not budge to this sort of threats.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
26-மே-202201:20:35 IST Report Abuse
s t rajan சொன்னதைச் செய்ய மாட்டோம். பொல்லாததை எல்லாம் செய்வோம் - இது தான் திமுகவின் திராவிட மாடல்.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
25-மே-202216:33:25 IST Report Abuse
Raj அப்படியே... குஜராத், UP , கர்நாடகாவிலும் குறைக்க சொல்லி ஒரு மெகா பேரணி நடத்துங்களேன்
Rate this:
raja - Cotonou,பெனின்
25-மே-202218:54:14 IST Report Abuse
rajaUPகுஜராத்தி. கர்நாடகா காரனுக்கு தமிழன் ஒட்டு போடலையே.... கேடுகெட்ட விடியா மூஞ்சிக்கு தானே போட்டாங்க........
Rate this:
25-மே-202220:40:12 IST Report Abuse
ஆரூர் ரங்அங்குள்ள விலைகளை விசாரிச்சு🤔 ஆதாரத்துடன் எழுதுங்களேன் .( அண்ணாமலை அம்மாநிலங்களுக்கு போய் பெட்ரோல் போட போவதில்லையே )...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X