சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவி!| Dinamalar

சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவி!

Added : மே 25, 2022 | |
கடலுார் அடுத்த சாவடி, ஞானாம்பாள் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 43; போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, சிவகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருந்தது.சிவக்குமாரின் மகள் அவந்திகா, 15, கடலுார் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம்

கடலுார் அடுத்த சாவடி, ஞானாம்பாள் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 43; போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, சிவகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருந்தது.

சிவக்குமாரின் மகள் அவந்திகா, 15, கடலுார் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்தார். நேற்று கணித தேர்வு நடந்த நிலையில், தந்தை இறந்ததால், அவந்திகா சோகத்தில் ஆழ்ந்தார். அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி, அவரை தேர்வு எழுத அனுப்பினர்.மனதை திடப்படுத்திக்கொண்ட அவந்திகா, தான் தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தந்தையின் உடலை அடக்கம் செய்யலாம் என, கூறிவிட்டு கண்ணீருடன் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து வந்த பிறகு, தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இச்சோக சம்பவம் அங்கிருந்தவர்கள் மனதை உருக்கியது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X