அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் உள்ள ராப் தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும்
 Texas Governor Greg Abbott confirms 15 deaths

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் உள்ள ராப் தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.


latest tamil news


பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அப்போட் கூறுகையில், இப்பள்ளியில் 500கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 18 வயதுடைய இளைஞன் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 18 மாணவர்கள், 1 ஆசிரியர்,மேலும் இருவர் என 21 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர் என்றார்.


பைடன் அதிர்ச்சி:

அமெரிக்க அதிபர் பைடன் குவாட் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார். நடந்த சம்பவம் குறித்து டெக்சாஸ் மாகாணவர் கவர்னருடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மே-202220:23:44 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K அமெரிக்கா செய்ய வேண்டியதெல்லாம் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பது மட்டும் தான். என்ன தான் அமெரிக்கா 100 சதவிகிதம் ஜனநாயக நாடாக இருந்தாலும் அங்குள்ள மக்கள் வெளியில் நடமாடுவதற்கே பயப்படுகிறார்கள். ஆர்வமுடன் எங்காவது சாலைகளில் நடந்து சென்றால் ஒரு வித இனம் புரியாத பயம் தான் மனதை ஆட்கொள்கிறது.
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
25-மே-202216:14:08 IST Report Abuse
sethusubramaniam சுட்டவனை சுட்டுக்கொன்னுட்டா , எதுக்கு சுட்டான்னு எப்படி தெரியும்.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
25-மே-202213:12:29 IST Report Abuse
Nellai tamilan இந்தியாவில் ஆண்டிப்பட்டியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் கூட அமெரிக்க நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்வார்கள் ஆனால் அவர்கள்(அமெரிக்கா) முதுகில் வண்டி வண்டியாக இருக்கும் அழுக்கை சூட் அணிந்தும் நாற்றத்தை சென்ட் அடித்தும் மறைப்பார்கள்.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
25-மே-202220:00:44 IST Report Abuse
naadodiஅதுதான் நீங்க அடிக்கிரிகளே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X