மாவட்டத்தின் பெயரை மாற்றியதால் பதற்றம் : ஆந்திராவில் அமைச்சர் வீட்டுக்கு தீ

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
அமலாபுரம் :ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் அமைச்சரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோனசீமா மாவட்டத்தின் பெயரை 'டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா
மாவட்டம், பெயர் , பதற்றம் : ஆந்திரா  அமைச்சர் வீடு  தீ

அமலாபுரம் :ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் அமைச்சரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோனசீமா மாவட்டத்தின் பெயரை 'டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம்' என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது.


latest tamil news




இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தன.இந்நிலையில், அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் விஷ்வரூப் வீட்டு முன் நேற்று ஏராளமானோர் திரண்டு கல்வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென அமைச்சரின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதற்கு அங்கிருந்த 'காஸ்' சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கூறப்படுகிறது.


ஆனால், போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக ஆளுங்கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதி போர்க்களம் போல மாறியது. ஒரு கல்லுாரி பேருந்து, ஒரு அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தில், டி.எஸ்.பி., உட்பட 20 போலீசாருக்கும், போராட்டக்காரர்களில் 40 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
25-மே-202215:18:30 IST Report Abuse
ponssasi தமிழ்நாட்டில் அம்பத்கார், பெரியார், எம் ஜி ஆர் பெயர் சிலைகள் இல்லாத கிராமங்களே இல்லை எனலாம். ஜெயலலிதா இருக்கும்வரை தெரு, நகர் என்று வந்தது அவர் மறைவுக்குப்பின் அதை யாரும் கண்டுகொள்வதில்லை, தற்போது கருணாநிதி பெயர் காலம் இன்னும் நான்காண்டுகள் ஆட்சிக்குள் எவ்வளவு வைக்கமுடியுமோ அவ்வளவும் வைத்துவிடுவார்கள். அம்பர்கர் என்ன ஜெகன் கனவில் வந்து அழுதாரா? ஏதாவது பிரச்சனையை திசைதிருப்ப ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டு போவது என்பது இந்திய அரசியலில் தவிக்க முடியாததாகிவிட்டது.
Rate this:
Cancel
சங்கர் - நான்மாடக் கூடல்,இந்தியா
25-மே-202212:49:09 IST Report Abuse
சங்கர் அரசியல் தலைவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் புகழ் பெற்றவர்களாகவும், அனைவருக்கும் பொதுவானவர்களாகவும் இருந்தாலும், பிற்காலத்தில் அவர்களை ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களுக்கான தலைவராக மட்டும் அடையாளப்படுத்துவதால் , மற்ற பிரிவினர் அந்த தலைவரை வெறுக்கக்கூடிய சூழ்நிலைக்கு வந்துவிடுகின்றனர். மேலும் அரசியல் வியாதிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காகவும், ஓட்டுக்களை பெறவும் இதுபோன்ற அற்பத்தனமான விஷயங்களை செய்து மக்களை பிரித்து தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்கின்றனர். கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை.
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
25-மே-202211:50:33 IST Report Abuse
V.B.RAM எங்கு பார்த்தாலும் ,இதே பெரு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X