இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: கந்து வட்டி கும்பல் கொடூரம் : தம்பதி அடித்துக் கொலை

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்:கந்து வட்டி கும்பல் கொடூரம் : தம்பதி அடித்துக் கொலை ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே, கணவன், மனைவியை கந்து வட்டி கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரி வாய்க்கால் ஓரம், நேற்று காலை ஆண், பெண் உடல்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.இறந்து
இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: கந்து வட்டி, தம்பதி  கொலை


தமிழக நிகழ்வுகள்:கந்து வட்டி கும்பல் கொடூரம் : தம்பதி அடித்துக் கொலை

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே, கணவன், மனைவியை கந்து வட்டி கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரி வாய்க்கால் ஓரம், நேற்று காலை ஆண், பெண் உடல்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், அரசன்தாங்கலைச் சேர்ந்த நெசவு தொழிலாளி மாணிக்கம், 51, அவர் மனைவி ராணி, 47, என்பது தெரிந்தது.போலீசார் கூறியதாவது:மாணிக்கம் மகள் சசிகலாவுக்கு திருமணமான நிலையில், தந்தை வீட்டிலேயே தங்கி, தனியார் கல்லுாரியில்
செவிலியர் இரண்டாமாண்டு படிக்கிறார்.மகன் பெருமாள் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதனால், குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்ட மாணிக்கம், காஞ்சிபுரத்திலுள்ள ஒரு கந்து வட்டி கும்பலிடம் கடந்தாண்டு, 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
அசல், வட்டியை கட்டாததால், கந்து வட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை மாணிக்கம், ராணியை காரில் கடத்தி வந்து, கட்டையால் அடித்துக் கொலை செய்து, கைலாசபுரம் ஏரி வாய்க்கால் ஓரம் வீசிச் சென்று
உள்ளனர்.இவ்வாறு கூறினர்.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news

பா.ஜ., நிர்வாகி படுகொலை சென்னையில் பயங்கரம்சென்னை :சென்னை சிந்தாதிரிப் பேட்டையில், பா.ஜ., நிர்வாகி, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை, சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர், 30. இவர், பா.ஜ.,வின் எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 7:50 மணிக்கு பாலசந்தர் தனக்கான பாதுகாப்பு போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுடன், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றார்.
அங்கு, சிலருடன் பாலசந்தர் பேசிக் கொண்டிருந்த போது, பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கும்பல், பாலசந்தரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
சிந்தாதிரிப்பேட்டை போலீசார், பாலசந்தர் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.
பல்வேறு திட்டப் பணிகளை துவங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னை வரும் நிலையில் சென்னையின் மையப் பகுதியில், பா.ஜ., நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

******************


இந்திய நிகழ்வுகள்:போலீஸ்காரர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து இருந்த போலீஸ்காரர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசிப்பவர் சைபுல்லா குவாத்ரி. போலீஸ்காரரான இவர் நேற்று தன் மகளுடன் வீட்டுக்கு வெளியில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது, பைக்குகளில் வந்த பயங்கரவாதிகள் இருவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். சைபுல்லா அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்ந்தார். அவரது ஏழு வயது மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக, ஜம்மு - காஷ்மீரில் போலீஸ் மற்றும் பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

கொல்லம்,: கேரளாவில், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி விஸ்மயாவின் கணவர் கிரண் குமாருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, கேரள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் விஸ்மயா, 22. ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த இவருக்கும், கொல்லத்தின் சாஸ்தம்கோட்டா பகுதியை சேர்ந்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கிரண் குமார் என்பவருக்கும், 2020ல் திருமணம் நடந்தது. திருமணத்தில், 100 சவரன் தங்க நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
சாஸ்தம்கோட்டாவில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்த விஸ்மயா, கடந்த ஆண்டு, ஜூன் 21ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய தினம், தன் கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

கணவரின் துன்புறுத்தலால் உடலில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களையும் அனுப்பினார். இதையடுத்து, கிரண் குமார் கைது செய்யப்பட்டார். அவருக்கு, உச்ச நீதிமன்றம் 'ஜாமின்' அளித்தது. இந்த வழக்கு விசாரணை, கொல்லம் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 'விஸ்மயாவின் கணவர் கிரண் குமார்
குற்றவாளி' என, நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
விஸ்மயாவின் கணவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சுஜித் உத்தரவிட்டார். இதில், இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை, விஸ்மயாவின் பெற்றோரிடம் நேரடியாக வழங்க உத்தரவிடப்பட்டது. ''கிரண் குமாருக்கு ஆயுள் தண்டனை
கிடைக்கும் என எதிர்பார்த்தோம். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் திருப்தி இல்லை,'' என,
விஸ்மயாவின் தாயார் தெரிவித்தார்.
விஸ்மயாவின் தந்தை கூறுகையில், ''நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. மேல்முறையீடு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

*******************


உலக நிகழ்வுகள்:உயிர் தப்பினார் புடின் உக்ரைன் அதிகாரி தகவல்
கீவ்,: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறியதாவது:ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷ்யாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி நடந்தது. பிப்., 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கிய பின் இந்த முயற்சி நடந்தது. அதில் புடின் மீது தாக்குதல் நடந்தது. ஆனால்
அவர் அதில் உயிர் பிழைத்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
26-மே-202204:03:15 IST Report Abuse
LAX 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓஹோன் னு உள்ளது' என சட்டப்பேரவையில், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்.. காவல்துறையை கையில் வைத்திருப்பவர், தற்போதுதான் பேட்டரி சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, ஜிம் ஃபோட்டோ ஷூட்டிங்க்கு லீவு சொல்லிவிட்டு, ஊட்டியில டான்ஸ் ஆடிய களைப்பில் இருக்கிறார்.. 🤡
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
26-மே-202200:28:13 IST Report Abuse
Desi பொய் வாக்குறுதிகளை நம்பி மோசம் போனதே டுமிலகம்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
25-மே-202219:42:11 IST Report Abuse
Darmavan 20 நாட்களில் 18 கொலைகள் என்று செய்தி.ரௌடிகள் ராஜ்யம் எங்கு கொண்டு போய் விடுமோ இது.
Rate this:
25-மே-202219:49:43 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்எதற்கும் நீ உஷாரா இரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X