நிதிஷ்குமார் எதிர்ப்பை மீறி இன்று ஆர்.சி.பி., சிங் ராஜ்யசபாவுக்கு வேட்புமனு ?

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் எதிர்ப்பையும் மீறி ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டி வேட்புமனு தாக்கல் செய்ய மூத்த தலைவரான ஆர்.சி.பி. சிங் இன்று டில்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக, ஆர்.சி.பி சிங் என அழைக்கப்படும் ராம் சந்திர பிரசாத் சிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேர்வு
RCP Singh leaves Patna as nomination for RS polls begins, suspense over his candidature continues

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் எதிர்ப்பையும் மீறி ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டி வேட்புமனு தாக்கல் செய்ய மூத்த தலைவரான ஆர்.சி.பி. சிங் இன்று டில்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக, ஆர்.சி.பி சிங் என அழைக்கப்படும் ராம் சந்திர பிரசாத் சிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக இருப்பதால், கட்சியை வழிநடத்தவும் ஒழுங்கமைக்கவும் ஆர்.சி.பி சிங்கை நம்பி கட்சி பணிகளை நிதிஷ் ஒப்படைத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி சரிவர பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.


latest tamil news

இந்நிலையில் ஜூன் 10-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட ஆர்.சி.பி. சிங், மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இவரை மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்க நிதிஷ் விரும்பவில்லை. இதையடுத்து நிதிஷ் எதிர்ப்பையும் மீறி நேற்று பாட்னாவிலிருந்து கிளம்பிய ஆர்.சி.பி., சிங் , டில்லி சென்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-மே-202207:36:50 IST Report Abuse
Rpalnivelu திருட்டு மாபியாவைப்போல குடும்பத்துக்குள்ளே யாரையாவது தேர்ந்த்தெடுங்கள் இல்லையெனில் தங்களுக்கு எதிர்ப்பைக் காட்டாத கூஜாக்களுக்கு பதவிப் பிட்சை கொடுங்க அண்ணாவை ஏமாற்றி வேறொரு அண்ணாவிடம் மாட்டிகிடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X