கோவை:சென்னையில் நடந்த மாநில அளவிலான 'கிக் பாக்சிங்' போட்டியில், அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரி மாணவர்கள், நான்கு தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தினர்.தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் - 2022க்கான போட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.இப்போட்டியில், மாநிலம் முழுவதும் இருந்து, 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். 'சப்-ஜூனியர்', 'ஜூனியர்' மற்றும் 'சீனியர்களுக்கு' பல்வேறு எடை பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற கே.பி.ஆர்., கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மாணவர்கள் நான்கு பேர், நான்கு தங்கப்பதக்கங்கள் வென்றனர்.முதலாம் ஆண்டு மாணவர்கள் பிரணவ் பிரபு, 71கிலோ எடை பிரிவிலும், விக்னேஷ்வர், 63கிலோ எடை பிரிவிலும், அஷ்வின் 54 கிலோ எடை பிரிவிலும், அபினாஷ் 94+ கிலோ எடை பிரிவிலும் தங்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர், பாலுசாமி, உடற்கல்வித்துறை இயக்குனர் முனுசாமி பாராட்டினர்.