விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வேளாண் துறையின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்க விழா நடந்தது.
தும்பூர் கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.தும்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கி திட்டம் குறித்து பேசினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன், ஆத்மா குழு தலைவர் ரவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி துரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட துணை அமைப்பாளர் எத்துராசன், அருள்மொழி, வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.