'பார்' ஆக மாறிய குளக்கரை

Added : மே 25, 2022 | |
Advertisement
போத்தனூர்:போத்தனூர் அடுத்த வெள்ளலூரில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 90 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றிலும் தற்போது கரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிகொண்ட 'குடி' மகன்கள், இரவு நேரத்தில் திறந்தவெளி பார் ஆக மாற்றியுள்ளனர். காலி பாட்டில்கள், குளிர்பானம், குடிநீர் பாட்டில்கள், டம்ளர்களையும் கரையில் வீசி செல்கின்றனர். இதுகுறித்து

போத்தனூர்:போத்தனூர் அடுத்த வெள்ளலூரில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 90 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றிலும் தற்போது கரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிகொண்ட 'குடி' மகன்கள், இரவு நேரத்தில் திறந்தவெளி பார் ஆக மாற்றியுள்ளனர். காலி பாட்டில்கள், குளிர்பானம், குடிநீர் பாட்டில்கள், டம்ளர்களையும் கரையில் வீசி செல்கின்றனர். இதுகுறித்து யாரேனும் கேட்டால், தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். சில நேரங்களில் கும்பலாக வருவோர் தங்களுக்குள் தகராறிலும் ஈடுபடுகின்றனர். இதுபோலவே வெள்ளலூர் - போத்தனூர் சாலையில், எல்ஜி நகர் பேஸ் 1 பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே காலியிடமும், இரவு நேர பார் ஆக மாறிவிடுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X