வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இக்கோவிலில் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, நேற்று காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார். அவரை கும்ப மரியாதையுடன், கோவில் ஸ்தாபகர் ரமணி, அறங்காவலர்கள் வரவேற்றனர்.மூலவர் சன்னிதியில் துர்கா, சங்கல்பம் செய்து கொண்டார்.
![]()
|
பின், முதல்வர் குடும்பத்தாருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கும்ப நீர், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின், தரையில் அமர்ந்து, 10 நிமிடங்கள் தியானம் செய்து
புறப்பட்டார்.இந்நிகழ்வில், அறநிலையத் துறை இணைக் கமிஷனர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் அருட்செல்வன், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE