அனுமதியின்றி வாணவெடி தயாரித்த வாலிபர் கைது

Added : மே 25, 2022 | |
Advertisement
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கண்ணுடையான் பட்டியில் கடந்த 22 இரவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த தமிழ்குமார் 42 என்பவர் காயமடைந்த நிலையில் கிடந்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய மணப்பாறை போலீசார் மணப்பாறை அருகே அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் 32 என்பவர் அனுமதியின்றி

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கண்ணுடையான் பட்டியில் கடந்த 22 இரவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த தமிழ்குமார் 42 என்பவர் காயமடைந்த நிலையில் கிடந்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்திய மணப்பாறை போலீசார் மணப்பாறை அருகே அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் 32 என்பவர் அனுமதியின்றி வெடி பொருட்களை பதுக்கி வாணவெடி தயாரித்ததும் அந்த பொருட்கள் வெடித்ததில் தமிழ்குமார் காயமடைந்ததையும் கண்டறிந்தனர்.

இதையடுத்து கொட்டகையில் இருந்து 6 கிலோ வெடிப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் நேற்று பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X