காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு இன்று தண்டனை அறிவிப்பு

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி,-'பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதிகள் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது
Yasin Malik Sentencing In Terror Funding Case Likely On Wednesday

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-'பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதிகள் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


latest tamil newsஇந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபிஸ் சயீது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாஹுதீன் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், “இந்த வழக்கில், பிரிவினைவாதி யாசின் மாலிக், குற்றவாளி,” என, சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார். மாலிக்கின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்யக்கோரி என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதன் அடிப்படையில், அவருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளார்.யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரங்கள், இன்று மே 25ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
25-மே-202215:44:29 IST Report Abuse
sethusubramaniam எதற்கென்று அறியாமலே பாட்டரி கொடுத்ததால் விடுதலை. அதுபோல காசு கேட்டாங்க கொடுத்தேன் . அது பயங்கரவாதத்திற்குன்னு தெரியாதுன்னு ஜெத் மலானியை விட்டு வாதாடி தப்பிச்சிருக்கலாம். சரி அபராதம்தானே , உங்களுக்காக கட்ட நிறைய நாடுகளே இருக்கு. கவலைப்படாதீங்க. யாசின் மாலிக் , க்யா சின் மாலிக்.
Rate this:
Cancel
Naga Subramanian - Kolkatta,இந்தியா
25-மே-202215:08:36 IST Report Abuse
Naga Subramanian அவருடைய போதாத நேரம், அவர் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-மே-202214:51:16 IST Report Abuse
வெகுளி யாசின் மாலிக்கிற்கான தண்டனை இங்குள்ள பிரிவினைவாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X