தனியார் நிலக்கரி தமிழகம் வந்தது

Added : மே 25, 2022 | |
Advertisement
சென்னை: தமிழக மின் வாரியத்தின், 4,320 மெகா வாட் திறன் உடைய, ஐந்து அனல் மின் நிலையங்களில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. இந்த நிலக்கரி, ஒடிசாவில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து தினமும் அனுப்பப்படுகிறது. தமிழகத்திற்கு ஏப்., வரை தினமும், 5 கோடி கிலோவுக்கு குறைவாகவே நிலக்கரி அனுப்பப்பட்டது. இதனால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு

சென்னை: தமிழக மின் வாரியத்தின், 4,320 மெகா வாட் திறன் உடைய, ஐந்து அனல் மின் நிலையங்களில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. இந்த நிலக்கரி, ஒடிசாவில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து தினமும் அனுப்பப்படுகிறது.

தமிழகத்திற்கு ஏப்., வரை தினமும், 5 கோடி கிலோவுக்கு குறைவாகவே நிலக்கரி அனுப்பப்பட்டது. இதனால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அனல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், இரு ஆண்டுகளுக்கு பின், மே, ஜூன் மாத தேவைக்கு, 48 கோடி கிலோ நிலக்கரி இறக்குமதி செய்ய, மின் வாரியம் மார்ச்சில், 'டெண்டர்' கோரியது. அதில் நான்கு தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இரு நிறுவனங்கள் தேர்வாகின.

ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள், நிலக்கரி சப்ளை செய்யும் பணியை துவக்கியுள்ளன. ஒரு நிறுவனம், 5.80 கோடி கிலோ நிலக்கரியுடன் அனுப்பிய முதல் கப்பல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணுார் துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் வந்தது.அந்த கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்டு, 'கன்வேயர் பெல்ட்' வாயிலாக அருகில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்திற்கு அனுப்பும் பணி நடக்கிறது. இதையடுத்து, இரு ஆண்டுகளுக்கு பின், மின் வாரியத்திற்கு தனியார் நிலக்கரி கிடைக்க துவங்கியுள்ளது.

50 கோடி கிலோ!
மத்திய தொகுப்பில் இருந்து, இம்மாதத்தில் தினமும், 5.40 கோடி கிலோவுக்கு மேல் நிலக்கரி அனுப்பப்படுகிறது. காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைப்பதால் நிலக்கரியை மிச்சப்படுத்த, அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது.நேற்றைய நிலவரப்படி, ஏழு நாட்களுக்கு தேவையான, 50 கோடி கிலோ நிலக்கரி இருப்பு உள்ளது. இனி நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது என, மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X