விசா மோசடி விவகாரம்: சி.பி.ஐ. முன் இன்று கார்த்தி சிதம்பரம் ஆஜர் ?

Added : மே 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : சீனர்களுக்கு சட்டவிரோதமாக, 'விசா' வாங்கித் தந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று (மே 25) சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி., யுமான கார்த்தி சிதம்பரம், சீன நாட்டினர் 263
Visa scam case: Karti Chidambaram likely to appear before CBI on Wednesday

சென்னை : சீனர்களுக்கு சட்டவிரோதமாக, 'விசா' வாங்கித் தந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று (மே 25) சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி., யுமான கார்த்தி சிதம்பரம், சீன நாட்டினர் 263 பேருக்கு, சட்ட விரோதமாக 'விசா' பெற்றுத் தந்துள்ளார். இதற்காக, ரூ50 லட்சம் லஞ்சம் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன், 55, என்பவரை டில்லி சி.பி.ஐ., கைது செய்து விசாரித்தனர்.


latest tamil newsவிசாரணையடுத்து, முதல் குற்றவாளி பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளி கார்த்தி சிதம்பரம் மீது டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சென்னை, டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், 18 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக விசா பெறுவது பற்றி, சீன நாட்டினருடன் பாஸ்கர ராமன், தகவல் பரிமாற்றம் நடத்தியதற்கான ஆதாரங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில் விசா மோசடி விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகலாம் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கார்த்தி சிதம்பரம் எந்த நேரமும் கைதாகலாம் எனவும் கூறப்படுகிறது.


கார்த்தி சிதம்பரம் மறுப்பு'விசா நடைமுறையில், சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'விசா' விவகாரத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வேறு எந்தவொரு வகையிலோ, எனக்கு தொடர்பில்லை. சி.பி.ஐ., என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனங்களுடனும் எனக்கு தொடர்பில்லை. விசா நடைமுறையில், சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை.
நாட்டில் திட்டங்கள் சார்ந்த பணிகளுக்கு, விசா வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. மேலும், விசா வழங்கக்கூடிய அதிகாரி எவரும் எனக்கு தெரியாது.
கடந்த ஏழு ஆண்டுகளில், எவ்வித ஆதாரமும் இல்லாமல், ஆறு முறை சோதனைகளுக்கு உள்ளாகி உள்ளேன். மத்திய அரசின் அமைப்புகள், ஒரு கட்சியின் அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படும் வகையில் மாறியுள்ளது வருத்தத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
25-மே-202212:55:38 IST Report Abuse
Sridhar ஏங்க, இப்படி ஒரு அப்பாவி பயபுள்ள மேல அபாண்டமான பழி போட்டு சித்தரவத செய்யறீங்க? அவுரும் அவர் குடும்பமும் எவ்வளவு வழுக்குகளைத்தான் சந்திக்கும்? ஒரு உச்ச கோர்ட் நீதிபதி குடும்பத்துக்கே இந்த நிலைமை நா, சாதாரண குடிமகன் தப்பு செஞ்சா என்ன பாடுபடுத்துவீங்க?
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
25-மே-202208:48:39 IST Report Abuse
r ravichandran தந்தையும் மகனும் எந்த ஒன்றையும் விட்டு வைக்கவில்லை என்று நினைக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X