குதுப்மினார் நினைவு சின்னம் தான் வழிபாட்டுத் தலமல்ல: தொல்லியல் துறை

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி, :'டில்லியில் உள்ள குதுப்மினார் வழிபாட்டுத் தலமல்ல; நினைவு சின்னம் தான்' என, நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.டில்லியின் அடையாளங்களுள் ஒன்றாக உள்ள குதுப்மினாரை, முஸ்லிம் மன்னர் குத்புதின் அய்பக் கட்டினார். இந்நிலையில், 'இது, 27 ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களை இடித்து கட்டப்பட்டது' என, சில ஹிந்து அமைப்புகள் கூறி வருகின்றன.இந்நிலையில்,
குதுப்மினார் நினைவு, சின்னம் , : தொல்லியல் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி, :'டில்லியில் உள்ள குதுப்மினார் வழிபாட்டுத் தலமல்ல; நினைவு சின்னம் தான்' என, நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.டில்லியின் அடையாளங்களுள் ஒன்றாக உள்ள குதுப்மினாரை, முஸ்லிம் மன்னர் குத்புதின் அய்பக் கட்டினார்.இந்நிலையில், 'இது, 27 ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களை இடித்து கட்டப்பட்டது' என, சில ஹிந்து அமைப்புகள் கூறி வருகின்றன.இந்நிலையில், டில்லி நீதிமன்றத்தில், சங்கர் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'குதுப்மினார் கட்டப்படுவதற்கு முன், அங்கு 27
கோவில்கள் இருந்தன. அந்த வளாகத்தின் கோவிலில் இருந்த சிலைகள், இப்போதும் அங்கு உள்ளன. எனவே, குதுப்மினார் வளாகத்தில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என,
கூறியிருந்தார்.இதற்கிடையே, மத்திய கலாசாரத் துறை செயலர் கோவிந்த் மோகன், சமீபத்தில் குதுப்மினார் வளாகத்தை பார்வையிட்டார். இதையடுத்து, உண்மை நிலையை கண்டறிய, அங்கு ஆய்வு மேற்கொள்ளும்படி தொல்லியல் துறைக்கு மத்திய கலாசார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதை கலாசாரத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.


latest tamil news
இந்நிலையில், டில்லி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது:குதுப்மினார் ஒரு நினைவு சின்னம் தான்; வழிபாட்டுத் தலமல்ல. இது, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன், எந்த சமூகத்தின் வழிபாட்டுத் தலமாகவும் இல்லை.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின், அந்த இடத்தில் மாற்றம் செய்வது சட்டத்துக்கு விரோதமானது. கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடர வேண்டும். அதை பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்பு, தொல்லியல் துறைக்கு உள்ளது.
அதனால், குதுப்மினார் வளாகத்தில் வழிபாடு நடத்த உரிமை கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-மே-202220:57:51 IST Report Abuse
J. G. Muthuraj மதம், அரசியல், மன்னர் ஆட்சி இம்மூன்றும் பின்னிப்பிணைந்ததுதான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகள் கால இந்திய வரலாறு...பல ஆட்சியாளர்கள் அவர்கள் மதத்தை மக்களிடம் திணித்தார்கள்....தனது மதம் பிற மதங்களைவிட சிறப்பானது....ஆகவே தன்தன் மதத்தின் பெயரால் மற்ற மதங்களை சிறுமைப்படுத்தலாம் அல்லது அழித்துவிடலாம் என்ற போங்கு பலபேரரசர்களிடம் காணப்பட்டது.....குதுப்மினார் இஸ்லாம் சமயத்தின் வெற்றி சின்னமாக கருதப்பட்டது...அதின் கட்டிட பொருட்கள் இந்து கோயில்களில் இருந்து வந்திருக்க வாய்ப்பு உண்டு....அங்கிருந்தோ அல்லது அதன் பக்கத்திலிருந்த மசூதியிலிருந்தோ இஸ்லாமிய வழிபாடு நடந்தது என்று தான் வரலாற்று நிபுணர்கள் சொல்கிறார்கள்...வரலாற்றில் ஒரு மதத்திற்குரிய நூற்றுக்கணக்கான வழிபாட்டுத்தலங்கள் பிற மத வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வழிபட்டு கூடமாக இடித்து மாற்றப்பட்டிருக்கின்றன.....அதைவிட மோசமானது என்னவென்றால், வழிபாட்டுத்தலங்களின் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன....அதனை சார்ந்த மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்....நிகழ்காலத்தில், எதிர்காலத்தில்தான் இத்தகைய கொடிய செயல்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளமுடியும்....கடிகார முட்களை பின்னோக்கி நகர்த்தமுடியாது....1947, 1991 PLACES OF WORSHIP ACT முற்றிலும் பின்பற்றப்படவேண்டும்....கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற அடிப்படையில் ஈடு தேடமுடியாது....ஒரு வழிபாட்டுத்தலத்தில் இரு மதங்கள் வழிபாடு இருந்தால் அவைகள் பரஸ்பர ஒற்றுமையோடு நடைபெறவேண்டும்/நடத்தப்படவேண்டும் ....ஒவ்வொரு சமுதாயமும், தனிமனிதனும், கலப்பு மத நம்பிக்கைகள் கொண்ட ஆன்மிகத்தை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுதல் நல்லது.....இல்லையென்றால், நாட்டில் ஒற்றுமை சீர்குலையும்....நாம் எல்லோரும் பின்னோக்கி செல்ல நம் பயணத்தை ஆரம்பிக்கவேண்டியதுதான்....140 கோடி மக்களும் இதை செய்யவேண்டுமென்று நம்மில் ஒருசாரார் திட்டம் தீட்டினால், பயணம் அழிவுப்பாதையாக மாறும்.... வாழ்க பாரதம்...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
25-மே-202219:48:03 IST Report Abuse
Darmavan பிரவீன் குமார் என்பவர U டியூபில் குடும்ப மினார் கோயிலை இடித்து கட்டியதுதான் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
25-மே-202217:48:06 IST Report Abuse
chakra வழிபாட்டுத் தளங்களை இடிக்கும்போது காப்பாற்றாத கடவுள்களை பற்றி எதற்கு இந்த ஆராய்ச்சி பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்காக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X