பிரதமர் விழாவை புறக்கணிக்க தெலுங்கானா முதல்வர் முடிவு

Added : மே 25, 2022 | |
Advertisement
தெலுங்கானா: தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கும் கல்லுாரி விழாவை புறக்கணிக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இந்த அரசு, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுடன் விரோத போக்கை கடைபிடிக்கிறது.

தெலுங்கானா: தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கும் கல்லுாரி விழாவை புறக்கணிக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இந்த அரசு, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுடன் விரோத போக்கை கடைபிடிக்கிறது. மாநிலத்துக்கான அதிகாரத்தை மத்திய அரசு அபகரிப்பதாகவும், மதிப்புமிக்க திட்டங்களை தெலுங்கானாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு மாற்றுவதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.

இதையடுத்து மத்தியில் பா.ஜ., மற்றும் காங்., அல்லாது மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். மேலும், மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுடனும் இணக்கமற்ற சூழல் நிலவுகிறது.இந்நிலை யில், ஹைதராபாதில் உள்ள ஐ.எஸ்.பி., எனப்படும், இந்திய வர்த்தகப் பள்ளியின் 20வது ஆண்டு விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஹைதராபாத் வருகிறார்.

இந்த விழாவை புறக்கணிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வாயிலாக பிரதமர் மீதான அதிருப்தியை அழுத்தமாக பதிவு செய்ய அவர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.ஹைதராபாதில் கடந்த பிப்ரவரியில் சமத்துவத்துக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போதும், அந்த விழாவில் பங்கேற்காமல் முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
-நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X