மருத்துவமனை வரும் போலீசார் அத்துமீறல்: கமிஷனருக்கு டீன் காட்டமான கடிதம்!

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மதுரை: 'மதுரை அரசு மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவில் உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றாமல் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறுவதாக போலீஸ் கமிஷனருக்கு டீன் ரத்தினவேல் கடிதம் எழுதியுள்ளார்.இம்மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதில் அண்ணா பஸ்

மதுரை: 'மதுரை அரசு மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவில் உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றாமல் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறுவதாக போலீஸ் கமிஷனருக்கு டீன் ரத்தினவேல் கடிதம் எழுதியுள்ளார்.
இம்மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.



latest tamil news



இதில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் மருத்துவமனை விரிவாக்க மையத்தில் விபத்து சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான மருத்துவ வழிகாட்டு முறைகளை விசாரணைக்கு வரும் போலீசார் பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கமிஷனர் செந்தில்குமாருக்கு டீன் ரத்தினவேல் கடிதம் எழுதியுள்ளார். அதில், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அதற்கென பிரத்யேக காலணிகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவமனை ஸ்டேஷனில் உள்ள போலீசார் பலமுறை அறிவுறுத்தல்களை மீறி, மருத்துவ விதிகளை மீறி தீவிர சிகிச்சைப்பிரிவு வளாகத்திற்குள் காலணிகளுடன் நுழைந்து தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மருத்துவக்குழுவினரிடம் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.


latest tamil news



அதேபோல் ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் போலீசார் தங்களது டூவீலர்கள், வாகனத்தை நிறுத்துகின்றனர். இதுபோன்று இனியும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.'மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகளுக்கு இடையூறு இன்றி, மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றி விசாரணை நடத்த வேண்டும்' என போலீசாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
25-மே-202215:44:56 IST Report Abuse
ponssasi நீங்க படிச்ச மறுத்தவர் தானே அவங்களுக்கு போயி புத்தி சொல்லலாமா? சொன்னாதான் கேட்பார்களா?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-மே-202214:23:31 IST Report Abuse
Natarajan Ramanathan போலீசுக்கு வைத்தியம் பார்க்க மருத்துவர்கள் மறுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
25-மே-202212:46:26 IST Report Abuse
Oru Indiyan அவிங்க ஆட்சியில் இதையெல்லா. எதிர்பார்க்க கூடாது. இன்னும் ஒரு மணி நேரத்தில் டீன் தண்ணியில்லாத காட்டுக்கு துரத்தி அடிக்கபடுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X