திருடு போன ரூ.2.30 லட்சம் மிலிட்டரி கேன்டீன் பொருட்கள் மீட்பு| Dinamalar

திருடு போன ரூ.2.30 லட்சம் மிலிட்டரி கேன்டீன் பொருட்கள் மீட்பு

Added : மே 25, 2022 | |
உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை அருகே மிலிட்டரி கேன்டீனுக்கு எடுத்துச் சென்ற லாரியிலிருந்து திருடுபோன 2.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் கான்வென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன், 42; தமிழ்நாடு 12வது பட்டாலியன் அலுவலக சுபேதாரர். இவர், கடந்த ஜனவரி 1ம் தேதி இரவு 11:30 மணியளவில் சென்னை, சிட்லபாக்கம் மிலிட்டரி கேன்டீனில் இருந்து

உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை அருகே மிலிட்டரி கேன்டீனுக்கு எடுத்துச் சென்ற லாரியிலிருந்து திருடுபோன 2.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் கான்வென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன், 42; தமிழ்நாடு 12வது பட்டாலியன் அலுவலக சுபேதாரர். இவர், கடந்த ஜனவரி 1ம் தேதி இரவு 11:30 மணியளவில் சென்னை, சிட்லபாக்கம் மிலிட்டரி கேன்டீனில் இருந்து சேலம் கேண்டினுக்கு தேவையான பொருட்களை டாடா உல்ரா லாரியில் கொண்டு சென்றார்.
அங்கு சென்று சரி பார்த்தபோது, லாரி தார்பாய் கிழிக்கப்பட்டு ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது. மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் சேலம் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே திருச்சி, சமயபுரம் போலீசார், வழக்கு ஒன்றில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கோடீஸ்வரன், 47; புதுக்கோட்டை மாவட்டம், ஒடுங்கம்பட்டி பழனிசாமி, 45; சென்னை, மாதவரம் கிரி, 41; கும்மிடிபூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் தினேஷ், 35; ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தங்கபாண்டி, 24; ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மிலிட்டரி கேன்டீனுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து எலவனாசூர்கோட்டை அருகே தார்பாயை கிழித்து பொருட்களை திருடியது தெரியவந்தது.அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார், சமயபுரம் போலீசாரிடம் பிடிவாரன்ட் பெற்று குற்றவாளிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X