காட்டுமன்னார்கோவிலில் சொகுசு கார் பறிமுதல் | Dinamalar

காட்டுமன்னார்கோவிலில் சொகுசு கார் பறிமுதல் 

Added : மே 25, 2022 | |
காட்டுமன்னார் கோவில்: சென்னை ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மோசடி வழக்கு தொடர்பாக காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த நிறுவன மேலாளர் வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் சோதனை செய்து, சொகுசு காரை பறிமுதல் செய்தனர். கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.கொளக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் பட்டாபிராமன், 32; சென்னை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் மேலாளராக
காட்டுமன்னார்கோவிலில் சொகுசு கார் பறிமுதல் 

காட்டுமன்னார் கோவில்: சென்னை ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மோசடி வழக்கு தொடர்பாக காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த நிறுவன மேலாளர் வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் சோதனை செய்து, சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.கொளக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் பட்டாபிராமன், 32; சென்னை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை மோசடி செய்துள்ளதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் மேலாளராக இருந்த பட்டாபிராமன் மற்றும் இவரது தந்தை வீடுகளில் கடலுார் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.அவர்கள் இருவரும் வீட்டில் இல்லை. பட்டாபிராமன் வீட்டில் இருந்து நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள (டிஎன் 91 எல் 2786) என்ற எம்.ஜி கொகுசு கார் பறிமுதல் செய்து, போலீசார் எடுத்து சென்றனர். இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X