'ஸ்காலர்ஷிப்' மோசடி முயற்சி: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

Added : மே 25, 2022 | |
Advertisement
மதுரை: மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' பணம் வந்துள்ளதாக கூறி, நுாதன 'ஆன்லைன்' மோசடி நடப்பதால் மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மதுரை பழங்காநத்தம் கல்லுாரி மாணவர் அரவிந்த். இவருக்கு ஸ்காலர்ஷிப் பணம், 13 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளதாக அவரது தாய் மொபைல் போனில் ஒருவர் கூறியுள்ளார்.அவர் தன் உறவினர் மூலம் மீண்டும் அந்த மொபைல் போன் எண்ணுக்கு பேசிய போது,

மதுரை: மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' பணம் வந்துள்ளதாக கூறி, நுாதன 'ஆன்லைன்' மோசடி நடப்பதால் மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மதுரை பழங்காநத்தம் கல்லுாரி மாணவர் அரவிந்த். இவருக்கு ஸ்காலர்ஷிப் பணம், 13 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளதாக அவரது தாய் மொபைல் போனில் ஒருவர் கூறியுள்ளார்.அவர் தன் உறவினர் மூலம் மீண்டும் அந்த மொபைல் போன் எண்ணுக்கு பேசிய போது, 'மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன்.
அரவிந்துக்கு ஸ்காலர்ஷிப் பணம் வந்துள்ளது. அதை உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்புகிறோம்.'உங்கள் வங்கி கணக்கு விபரங்கள் வேண்டும்; அதில் எவ்வளவு பணம் உள்ளது' என கேட்டுள்ளனர்.சந்தேகப்பட்ட உறவினர், தகவல்களை தர மறுத்துள்ளார். இதையடுத்து, அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது போல நவநீதன் என்பவரிடம் மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது. அவரிடம் போனில் பேசி மோசடி செய்ய முயன்ற நபரின் மொபைல் போன் எண்ணை நமது நிருபர் தொடர்பு கொண்டபோது, 'சாரி... ராங் நம்பர்' எனக்கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X