மக்காச்சோள விலை அதிகரிக்க வாய்ப்பு

Added : மே 25, 2022 | |
Advertisement
மதுரை: மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது ஜூன் முதல் ஆக. வரை குவிண்டாலுக்கு ரூ.2400 - ரூ.2500 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என கோவை வேளாண் பல்கலை வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2020 - 21 ல் திண்டுக்கல், பெரம்பலுார், அரியலுார், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் 25.6

மதுரை: மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது ஜூன் முதல் ஆக. வரை குவிண்டாலுக்கு ரூ.2400 - ரூ.2500 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என கோவை வேளாண் பல்கலை வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2020 - 21 ல் திண்டுக்கல், பெரம்பலுார், அரியலுார், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் 25.6 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தியானது. தமிழகத்தின் மொத்த தேவையில் இது 30 சதவீதமாக உள்ளது. தமிழகத்திற்கான கர்நாடக வரத்து ஆகஸ்டில் தொடங்கும்.

பீஹார் வரத்து ஜூலை வரை நீடிக்கும். இந்தியாவில் காரிப் பருவத்தில் 85 சதவீதம் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கோழி, கால்நடை தீவனத்திற்கான உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவை சமீபகாலமாக அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டம் மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

இதன்படி ஜூன் முதல் ஆக. வரை குவிண்டாலுக்கு ரூ.2400 - ரூ.2500 வரை கிடைக்கலாம். விவசாயிகள் இந்த விலையை அடிப்படையாக கொண்டு சந்தை முடிவுகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 0422 - 243 1405.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X