'மத்திய அரசு எச்சரிக்கையால் முன்கூட்டியே தண்ணீர் திறப்பு'

Added : மே 25, 2022 | |
Advertisement
''முன்கூட்டியே தண்ணீர் திறக்க, தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரித்ததால், முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்துார், செல்லியம்பாளையத்தில், தி.மு.க., சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:ஓராண்டில் முதல்வர்,


''முன்கூட்டியே தண்ணீர் திறக்க, தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரித்ததால், முதல்வர் ஸ்டாலின் தண்ணீர்
திறந்துவிட்டுள்ளார்,'' என, அமைச்சர் துரை
முருகன் பேசினார்.
சேலம் மாவட்டம், ஆத்துார், செல்லியம்பாளையத்தில், தி.மு.க., சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
ஓராண்டில் முதல்வர், அமைச்சர்களை பார்த்து குற்றம் சொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது. ஜூன், 12ல் திறக்க வேண்டிய மேட்டூர் அணை, 20 நாளுக்கு முன் திறக்கப்பட்டது, 75 ஆண்டு கால சாதனை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தஞ்சாவூரில் துார்வாரும் பணி முடிய
வில்லை என்கிறார். அங்கு என்ன பணி நடக்கிறது என, முதல்வருக்கு நன்றாக தெரியும்.
பருவமழை தாறு
மாறாக போகிறது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில், தற்போது, 115 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அதிகளவில் தண்ணீர் வந்தால் அணை தாங்காது.
முன்கூட்டியே தண்ணீர் திறக்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு எச்சரித்ததால், முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து
விட்டுள்ளார்.
மேலும், 40 நாள் சட்டசபை கூட்டத்தில் எந்த கொம்பனும் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு சொல்ல முடியவில்லை. கருணாநிதி மகன் ஸ்டாலின் ஆட்சியில், ஓராண்டில் அதிகளவில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X