ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம்
School, Reopen, Tamilnadu

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இவர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்துள்ளன.


latest tamil news


இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொதுத்தேர்வுகள்


2022-23ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வும்,
மார்ச் 14ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வும்,
ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது?



காலாண்டு தேர்வுகள்: வரும் செப்டம்பர் 26ம் தேதி 1 முதல் 10ம் வகுப்புகளுக்கும், செப்டம்பர் 23ம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும் துவங்குகிறது. செப்.,30ம் தேதி காலாண்டு தேர்வுகள் முடிவடைகிறது.
அரையாண்டு தேர்வுகள்: டிசம்பர் 19ம் தேதி 1 முதல் 10ம் வகுப்புகளுக்கும், டிசம்பர் 16ம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும் துவங்குகிறது.
அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ல் முடிந்து 2023ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
இறுதித்தேர்வு: 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு 2023ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் 26ம் தேதி வரை நடைபெறும்.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-மே-202212:06:29 IST Report Abuse
Ramesh Sargam பள்ளிகள் திறப்பதற்கு முன்பு, பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு, மோசமான, இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள், மேலும் பராமரிப்பு தேவைப்படும் பள்ளிகள், இவைகளை கண்டறிந்து முறையாக பராமரிப்பு செய்து, குறிப்பாக எல்லா பள்ளிக்கூடங்களிலும் தேவையான தண்ணீர் வசதி மற்றும் கழிப்பிடம் இருக்கிறதா என்று பார்த்து சரிசெய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறை இதை கவனிக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X