அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி: சதி முறியடிப்பு

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
வாஷிங்டன்: ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ைஷ கொல்ல சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: ஜார்ஜ் புஷ்ைஷ கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் நேற்று( மே 24) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்
GeorgeWBush, bush, kill, plot, Revenge, Iraq War, Foiled, FBI, அமெரிக்கா ஜார்ஜ் புஷ், சதி முறியடிப்பு, ஈராக்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ைஷ கொல்ல சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: ஜார்ஜ் புஷ்ைஷ கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் நேற்று( மே 24) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில், குடிபெயர்வோர் செய்யும் குற்றம், அமெரிக்க முன்னாள் அதிகாரி மற்றும் தலைவரை கொல்ல முயற்சி மற்றும் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு செப்., மாதம் பார்வையாளர் விசாவிற்குள் ஷாகிப் அமெரிக்கா வந்தார். அவரது விசா காலம் காலாவதியானதை தொடர்ந்து 2021ம் ஆண்டு அடைக்கலம் கோரினார். கொலம்பஸ் பகுதியில் வசித்த ஷாகிப், எப்பிஐ., அமைப்புக்கு ரகசிய தகவல் அளிக்கும் நபரை தொடர்பு கொண்டு, ஜார்ஜ் புஷ்ைஷ கொலை செய்யும் சதி திட்டம் குறித்து விளக்கி உள்ளார். ஈராக் மீது போர் தொடுத்ததற்கும், அதனால் பல ஈராக்கியர்கள் இறந்தது மற்றும் அவர்கள் அகதிகளாக வெளியேறிய காரணங்களால் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.


latest tamil news
தான், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பகர் அல் பாக்தாதியின் உறவினர் எனவும் கூறியதுடன், சதி திட்டத்தை நிறைவேற்ற மெக்சிகோ எல்லை வழியாக மேலும் 4 ஈராக்கியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து விரவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதில் இரண்டு பேர், ஈராக் உளவுப்பிரிவில் பணியாற்றியவர்கள். மற்றவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனக்கூறியதுடன், டல்லாஸ், டெக்சாஸ் பகுதிகளில் ஜார்ஜ் புஷ் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன், கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள், சீரூடைகள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது குறித்தும் விவாதித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
25-மே-202218:02:39 IST Report Abuse
Krishnan Bush was like Mughal kings
Rate this:
Cancel
25-மே-202215:52:23 IST Report Abuse
அப்புசாமி தேவையில்லாமல், ஆதாரமில்லாமல் மஞ்சள் கேக் என்னும் அணு ஆயுதப் பொருளை சதாம் ஹுசேன் இறக்குமதி செஞ்சாங்கன்னு பொய்யான சேட்டலைட் இமேஜ்களைப் போட்டு இராக் மேலே போர் தொடுத்து ஏராளமான மக்களைக் கொன்னவர். இவருக்கு காமெடி பீசா பயன்பட்டவர் கோலின் பவல் என்னும்ராணுவ ஜெனரல். பிறகு, ஆப்கானிஸ்தானில் படையெடுத்து 2 டிரில்லியன் டாலரை வீணடித்தவர். 911 தாக்குதலை நடத்துனவுங்க அரேபியா ஆளுங்கன்னு தெரிஞ்சே இராக்க் மீது போர் தொடுத்த மகான் இவர். இவரெல்லாம் நல்லா இருக்காருன்னா கடவுள் இருக்கானா குமாரு?
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
25-மே-202213:18:52 IST Report Abuse
Paraman ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்த பீஜிங் பைடன், கமலா ஆரஞ்சு மற்றும் ''ஒசாமா ஒபாமா'' என்று அனைவருமே அமெரிக்க குடியரசின் விரோதிகள். நல்ல, உண்மையான திறமைகளை ஊக்குவிக்கும் சுதந்திர அமெரிக்க வாழ்க்கை முறையின் எதிரிகள் இந்த பதர்களின் ஆட்சியில் லட்சக்கணக்கான அமெரிக்க விரோத தீவிரவாத கும்பல்கள், தமிழகத்தின் திராவிஷ ஊழல் ரௌடி கும்பல்கள் சட்ட விரோதமாகவும், மோசடி செய்தும், எல்லையில் சுவரேறி குதித்தும் நாட்டிற்குள் புகுந்து விட்டார்கள். இவர்கள் சட்ட விரோதமாகவும், மோசடி செய்தும், பொய்யான கல்வி தகுதிகள், தரவுகள் மூலம் கடந்த 10.-15. வருடங்களில் அமெரிக்க கல்லூரிகள் அரசியல், வியாபாரம், வேலைகள் என்று பரவி விட்டார்கள். இந்த சமூக விரோதிகள் தங்கள் வேலையை காண்பிக்க தொடங்கியது கடந்த அதிபர் தேர்தலில் இப்போது எது நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டு இருக்கிறது...இது வெறும் ட்ரைலர் தான்..இன்னும் போக போக மெயின் பிக்ச்சர் இன்னும் கொடூரமா இருக்கும். அதற்குள் அமெரிக்க அரசாங்க உளவு மற்றும் பாதுகாப்பு துறைகள் விழித்து கொண்டு இவர்களை கண்டறிந்து முற்றிலும் அழிக்காவிடில் அமெரிக்கா சிதறுவது அழிவது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X