இந்திய பங்குச்சந்தைகள் 30% வரை சரியக் கூடும்: மார்க் மொபியஸ்

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கிய பிப்ரவரியிலிருந்து உலக பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் 30 ஆண்டுகாலமாக உலக பங்குச்சந்தைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மார்க் மொபியஸ் இந்திய பங்குச்சந்தைகள் அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரைக் கூட விழக்கூடும் என்றார்.பணவீக்க பிரச்னை இருந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் போர் பொருளாதாரத்தை கடினமான
Nifty, Sensex, Fall, 30 percent, Mark Mobius, இந்தியா, பங்குச்சந்தை, வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கிய பிப்ரவரியிலிருந்து உலக பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் 30 ஆண்டுகாலமாக உலக பங்குச்சந்தைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மார்க் மொபியஸ் இந்திய பங்குச்சந்தைகள் அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரைக் கூட விழக்கூடும் என்றார்.

பணவீக்க பிரச்னை இருந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் போர் பொருளாதாரத்தை கடினமான காலக்கட்டத்துக்குள் கொண்டு சென்றது. இதனால் உச்சத்திலிருந்த பங்குச்சந்தைகள் தொடர் வீழ்ச்சியையும், கடுமையான ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. தற்போது, நிப்டி அதன் உச்சநிலையில் இருந்து 12 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதால் இந்த நிலை. இல்லையெனில் 15 சதவீத சரிவில் இருந்திருக்கும். ஐ.டி., வங்கி, உலோகப் பங்குகள், மருந்து நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் உள்ளன.


latest tamil news


இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரபல பங்குச்சந்தை நிபுணர் மார்க் மொபியஸ் கூறியதாவது: பங்குச்சந்தைகள் மேலும் வீழ்ச்சி காணக்கூடும். இந்திய குறியீடுகள் அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரை சரியக்கூடும். ஆனாலும் ஒரு நம்பிக்கை கீற்று உள்ளது. இந்திய சந்தை உலக சந்தைகளை விட சிறப்பாக செயல்படும். குறைந்த கடன் மற்றும் வலுவான விலை நிர்ணயம் செய்யும் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு மொபியஸ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
26-மே-202202:04:19 IST Report Abuse
Desi இந்த நபர் சொன்னது 99% எதுவும் பலிக்கவில்லை.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
26-மே-202201:59:19 IST Report Abuse
Desi இந்த நபர் சொன்னது 99% எதுவும் பலிக்கவில்லை.
Rate this:
Cancel
25-மே-202216:31:35 IST Report Abuse
அப்புசாமி இவரை ஒருத்தர்... என்ன பேசுறதுன்னு தெரியாம... பிரதமர் சிறப்பா செயல் படுகிறார்னு பேசணும்.நிதியமைச்சர் சூப்பர்னு சொல்லணும். மேலும் கொஞ்சம் வங்கிகளுக்கு நிதியளிக்கணும்னு சொல்லணும். அப்பத்தான் அடுத்த 20 லட்சம் கோடி பங்குசந்தைக்கு வரும். ஏற்கனவே போனவருஷம் வந்த 20 லட்சம் கோடியை சுருட்டி வெளியே எடுத்தாச்சு. அடுத்த சுற்றுக்கு அந்நிய முதலீ ட்டாளர்கள் ரெடியாயிட்டு வராங்க. இங்கே சுருட்டிய பணத்தை அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்யறாங்க. அங்கே வட்டி விகிதம் உயர்ந்து வருவதால் வங்கிகளில் முதலீடு செய்வது நல்லது. அது இன்னும் ஒரு நாலஞ்சு வருஷம் போகும். இங்கேயும் வட்டி விகிதம் உயரும். அதை ஈடு கட்ட இங்கே பொருள்களின் விலையை ஏற்றி மக்களிடமிருந்து உருவுவாங்க. விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதியைக் குறைப்பாங்க.. இங்கேயும் நுகர்வோர் வாங்கும் சக்தி குறையும். ஒரு சிறு பொறியும் பெரிய போராட்டமா வெடிக்கும் அபாயம் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X