காங்.,கில் இருந்து கழண்டுகொண்டார் கபில் சிபல்: சமாஜ்வாதி சார்பில் ராஜ்யசபாவுக்கு போட்டி

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
லக்னோ: காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 16ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக ராகுல், பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். இதனை
KapilSibal, RajyaSabha, elections,SP, congress, cong, samajwadiparty, கபில்சிபல், காங்கிரஸ், காங்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 16ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக ராகுல், பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். இதனை தொடர்ந்து,'கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை. கட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் தேவை' என, சோனியாவுக்கு, 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான கபில் சிபலும் ஒருவர். அதிருப்தியில் இருந்த அவரை, கட்சி மேலிடம் ஒதுக்கி வைத்திருந்தது. அவ்வபோது, கட்சியின் நடவடிக்கைகளை கபில் சிபல் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு நடக்கும் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட கபில் சிபல் இன்று( மே 25) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார்.


latest tamil news


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 16ம் தேதியே காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பி வைத்து விட்டதாக கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
25-மே-202220:20:25 IST Report Abuse
sankar அலைக்கற்றை மெகா ஊழலில் பொய் வழக்கு உரைத்திட்ட பெரியவர்
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-202220:15:56 IST Report Abuse
Yaro Oruvan யாரு நம்ம ஜீரோ லாஸ் விஞ்சானி டமால் டுமீலா... என்னடா இது கான்+கிராஸுக்கு வந்த சோதனை
Rate this:
Cancel
25-மே-202217:46:30 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரசு க்கு சீரோலாஸ்😉. அதான் எல்லாவற்றையுமே இழந்து ரொம்ப நாளாச்சு . இழக்க ஒன்றுமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X