ரேஷன் அரிசி கடத்தல்: அண்டை மாநில தலைவரே சொல்வது அவமானம்: ராமதாஸ் வேதனை

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அண்டை மாநில எதிர்க்கட்சி தலைவரே கூறியிருப்பது தமிழக அரசுக்கு அவப்பெயர் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஆந்திர முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழகத்தில் இருந்து, ரேஷன் அரிசியை
Ration Rice, Smuggling, Ramadoss, PMK, பாமக, ராமதாஸ், ரேஷன் அரிசி, கடத்தல், ஆந்திரா, சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின், அவமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அண்டை மாநில எதிர்க்கட்சி தலைவரே கூறியிருப்பது தமிழக அரசுக்கு அவப்பெயர் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழகத்தில் இருந்து, ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி வந்து, அரிசி ஆலைகளுக்கு அனுப்புவதாகவும், அங்கு அரிசியை 'பாலிஷ்' செய்து, மீண்டும் கடத்தல் கும்பலுக்கு அனுப்புவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தமிழகம் - ஆந்திரா எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் இயலாமையை அண்டை மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டிருப்பது அரசுக்கு அவப்பெயர் ஆகும். தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவது காலம் காலமாக நடந்து வருவது தான். ஆனால், ரேஷன் அரிசி தங்கள் மாநிலத்திற்கு கடத்தி வரப்படுவதை தடுக்க வேண்டும் என்று அண்டை மாநிலத்தின் தலைவர் ஒருவரே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு இப்போது நிலைமை மோசமாகியுள்ளது.


latest tamil news


இந்தியாவில் மிகவும் வலிமையான பொது வினியோக கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழகம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு ரேஷன் கடைகளுக்கான அரிசி கடத்தப்படுவதிலும் தமிழகம் தான் முதன்மை மாநிலம் என்பதும் உண்மை ஆகும். தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்தப்படுவது மட்டும் தொடர்கதையாக நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அனைத்து நிலையிலும் ஆதரவு உள்ளது என்பது தான் வேதனையான உண்மை. காலம், காலமாக அரிசிக் கடத்தல் நடைபெறும் போதிலும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாததன் நோக்கம் மட்டும் புரியவில்லை.

தமிழகத்தில் ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றால், பொது வினியோகத் திட்டத்தில் ஏதோ ஓட்டை உள்ளது என்று தான் பொருள். அந்த ஓட்டை அடைக்கப்பட வேண்டும். ரேஷன் அரிசிக் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
26-மே-202200:35:06 IST Report Abuse
Ramona தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு ரேஷன் கடையில் எடையில் சூடு இல்லாம பொருட்கள் மக்களுக்கு கிடைக்காது, யார் ஆட்சில் இருந்தாலும் இந்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது,
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
25-மே-202220:40:29 IST Report Abuse
Tamilan அவமானம் பார்த்தா அரசியலுக்கு , Govt / Pvt servant வேலைக்கு வந்தோம் . அப்படியெல்லாம் பார்த்தல் அரசியலில் , வேளையில் நீடிக்கமுடியுமா ?.
Rate this:
Cancel
25-மே-202219:34:29 IST Report Abuse
ந சசிகுமார் ரேஷன் கடைகளில் அளவு குறைவாக போடுகிறார்கள் . 25 கிலோ அரிசிக்கு 23 அல்லது 22 கிலோதான் போடுகிறார்கள் . பதிவு செய்த போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்த பின்புதான் அளவு தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X