5 மாதம் 5 ‛தலை'கள்: காங்.,கிற்கு 'குட்பை'

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: தொடர் தோல்வி காரணமாக காங்கிரசில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இது, கட்சியின் பலத்தையும், பா.ஜ.,வை எதிர்ப்பதிலும் அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இந்த ஆண்டில், காங்கிரசில் இருந்து வெளியேறிய 5 முக்கிய தலைவர்கள்கபில் சிபல்
congress, kapilsibal, hardikpatel,  ashwinikumar, sunil jakhar, RPNSINGH, cong, bjp, காங்கிரஸ், காங், கபில் சிபல், ஆர்பிஎன்சிங், ஹர்திக் படேல்,  அஸ்வினிகுமார், சுனில் ஜக்கார், பஞ்சாப், மாநில தலைவர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தொடர் தோல்வி காரணமாக காங்கிரசில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இது, கட்சியின் பலத்தையும், பா.ஜ.,வை எதிர்ப்பதிலும் அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டில், காங்கிரசில் இருந்து வெளியேறிய 5 முக்கிய தலைவர்கள்


கபில் சிபல்


latest tamil news


காங்கிரசில் பல ஆண்டுகள் செய்தி தொடர்பாளராகவும், மன்மோகன் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் கபில் சிபல். வழக்கறிஞரான இவர், கடந்த சில நாட்களாக, கட்சி மேலிடத்துடனான உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் சிக்கலாக இருந்தது. தலைமை மீது அதிருப்தியில் இருந்த 23 தலைவர்களில் ஒருவரான இவர், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர், கட்சி தலைமை கற்பனை நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர் என விமர்சித்து இருந்தார்.



சுனில் ஜக்கார்


latest tamil news


Advertisement

பஞ்சாப் மாநில தலைவராக இருந்த சுனில் ஜக்கார், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். முதல்வர் பதவி வகித்த சரண்ஜித்சிங் சன்னியை விமர்சித்ததற்காக அவருக்கு விளக்கம் கேட்டு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால், அதிருப்தி அடைந்த ஜக்கார் கட்சியில் இருந்து வெளியேறி, கடந்த மே 19ல் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில், நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? யார் என்பதை கட்சி மேலிடம் ஆராய வேண்டும் என்றார்.


ஹர்திக் படேல்


latest tamil news


தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த மே 21ம் தேதி கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில தலைவராக இருந்த ஹர்திக் படேல் அறிவித்தார். இது தொடர்பாக ராகுலுக்கு எழுதிய கடிதத்தில், மூத்த தலைவர்களை சந்திக்க சென்ற போது, தன்னை புறக்கணித்துவிட்டு மொபைல் போனில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துவதாக கூறியிருந்த அவர், மாநில நிர்வாகிகள் கட்சி விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், சிக்கன் சாண்ட்விச்சில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார்.


அஸ்வினி குமார்


latest tamil news


கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த அஸ்வினி குமார், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். மன்மோகன் சிங், கபில் சிபல் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். கட்சி சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி இருந்தார். கடந்த பிப்.,15ம் தேதி காங்கிரசில் இருந்து விலகினார். சோனியாவிற்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தில் அவர், தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு உகந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.


ஆர்பிஎன் சிங்


latest tamil news


மன்மோகன் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி வகித்த ஆர்பிஎன் சிங், உ.பி., சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.,வில் இணைந்தார். அதற்கு முன்னர், அக்கட்சியில் இருந்து ஜிதின் பிரசாதா விலகி பா.ஜ.,வில் இணைந்த நிலையில், அவரை பின்பற்றி ஆர்பிஎன் சிங் பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில், 32 ஆண்டுகளாக காங்கிரசில் உள்ளேன். தற்போது உள்ளது போல் முன் எப்போதும் இப்படி இருந்தது கிடையாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIDHURAN - chennai,இந்தியா
25-மே-202221:24:38 IST Report Abuse
VIDHURAN இவர்கள் எல்லாம் காங்கிரசிலிருந்து வெளியில் சென்றது சரி இவர்களையெல்லாம் பாஜக சேர்த்துக்கொண்டால், இவர்கள் எல்லோரும் அதையும் ஒரு காங்கிரஸ் ஆகிவிடுவார்கள்.
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
26-மே-202201:14:41 IST Report Abuse
Fastrack65 வயசுக்கு மேல் BJP கட்சியில் சேர்வதும் வாரணாசியில் வசிப்பதும் ஒரே மாதிரி .....
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
25-மே-202220:27:57 IST Report Abuse
Srivilliputtur S Ramesh சுதந்திரம் அடைந்ததும், காந்தியடிகள், காங்கிரஸ் கட்சியைக்கலைத்துவிடச்சொன்னார். அதே பணியை, இப்போது, சோனியாவும், ராகுலும் செய்து வருகிறார்கள்.... விரைவில் அந்தக்கட்சியில் மேற்சொன்ன இருவர் மட்டுமே மிஞ்சுவார்கள்... சபாஷ்.....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-மே-202219:24:21 IST Report Abuse
sankaseshan ராசியான வாயால் பப்பு பிரதமர் வேட்பாளர் என்று சொன்னாரோ அன்று பிடித்தது காங்கிரசுக்கு சனி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X