இது நம் கலாச்சாரம் இல்லையே: ஸ்டாலின் மீது பாயும் சஞ்சய் ராவத்..!

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
மும்பை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.ராஜிவ் படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. பேரறிவாளனை தொலைபேசியிலும், நேரிலும் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். இதனை திமுகவினர் தங்களது தேர்தல் வாக்குறுதி வெற்றியாகவே போஸ்டர்
ஸ்டாலின், சஞ்சய் ராவத், சிவசேனா, தமிழகம், திமுக, ராஜிவ், பேரறிவாளன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.

ராஜிவ் படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. பேரறிவாளனை தொலைபேசியிலும், நேரிலும் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். இதனை திமுகவினர் தங்களது தேர்தல் வாக்குறுதி வெற்றியாகவே போஸ்டர் ஒட்டி பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர். இது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், வாய் மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு அமைதி காத்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், பேரறிவாளன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிவசேனா மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், இதுபோன்ற விவகாரத்தில் சிலர் புதிய பரிணாமத்தை அளிப்பது. அது தேசத்திற்கு ஏற்றதாக கருதமுடியாது. அனைவருக்கும் தமிழகத்தின் அரசியல் பற்றி தெரியும். ராஜிவ் நம்முடைய தேசத்தின் தலைவர். அவர் தன்னையே தியாகம் செய்துள்ளார். அவர் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டவர். ஒருவேளை, ராஜிவ் படுகொலையை வரவேற்பதாக ஸ்டாலின் கருதும்பட்சத்தில், என்னை பொறுத்தவரை, இது நம்முடைய கலாச்சாரம் இல்லை.'இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrasekar - pune,இந்தியா
01-ஜூன்-202212:32:08 IST Report Abuse
chandrasekar தமிழகத்தில் உள்ளவர்கள் புதிய கோணத்தில் சிந்திப்பவர்கள். எல்லோரும் இருப்பதுபோல் சாதாரணமாக சிந்திப்பது என்பது எல்லா மக்களும் செய்வது. ஆனால் தமிழர்களோ வித்தியாசமானவர்கள். கலாச்சாரத்தையே மாற்றுபவர்கள். புதிய கலாச்சாரத்தில் வாழ விரும்புபவர்கள். மொத்தத்தில் மக்களுக்கு மேலாக வாழ விரும்புபவர்கள்.இப்படித்தான் செய்வார்கள். செய்வதை சட்டத்தின்படியே செய்வார்கள்
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
01-ஜூன்-202207:28:16 IST Report Abuse
sankar இன்னும் எத்தனையோ தமிழ் கைதிகள் பலப்பல தண்டனை மூலம் சிறையில் பல வருடங்கள் இருக்கிறார்கள் அவர்களையும் விடுவித்தாள் என்ன என்று கேள்வியும் வருகிறதே கொலையும் களவும் தியாகத்தின் ஒரு வெளிப்பாடு
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-மே-202210:36:29 IST Report Abuse
Matt P ஒரு வட நாட்டவர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லையே என நினைத்தேன். கொல்பவனும் நானே காப்பவனும் நானே என்பது போல தமிழ்நாட்டவர் தான் ராஜிவ் மேல் அனுதாபம் காட்டினமாதிரி தெரிந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X