போட்டோகிராபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு| Dinamalar

போட்டோகிராபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | |
இன்றைய கேமிராக்களின் நவீன தொழில் நுட்பத்தை தொட்டுப்பார்த்து அறியவும்,துறை சார்ந்த நிபுணர்களை சந்தித்து விளக்கம் கேட்கவும்,குறைந்த விலையில் தரமான கேமிரா தொடர்பான பொருட்கள் வாங்கவும்,மாடல்களை படம் எடுக்கவும்,எடுத்த படங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசினை பெறவும் போட்டோகிராபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு, இந்த வாய்ப்பு முற்றிலும் இலவசமாகlatest tamil news


இன்றைய கேமிராக்களின் நவீன தொழில் நுட்பத்தை தொட்டுப்பார்த்து அறியவும்,துறை சார்ந்த நிபுணர்களை சந்தித்து விளக்கம் கேட்கவும்,குறைந்த விலையில் தரமான கேமிரா தொடர்பான பொருட்கள் வாங்கவும்,மாடல்களை படம் எடுக்கவும்,எடுத்த படங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசினை பெறவும் போட்டோகிராபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு, இந்த வாய்ப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது
எங்கே? எப்போது? என்று நீங்கள் ஆவலுடன் கேட்பதற்கான பதில் கிழே விரிவாக உள்ளது.
வருகின்ற 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் மதுரையில் பிக்சல் போட்டோ மற்றும் வீடியோ பொருட்காட்சி‛ ஐடா ஸ்கட்டர் கன்வென்சன்' ஏசி அரங்கில் நடைபெற உள்ளது.


latest tamil news


கண்காட்சியில் நிக்கான்,சோனி,கேனன்,பியூஜி.கோடாக்ஸ்,பானோசானிக் உள்ளீட்ட பல்வேறு கேமிரா நிறுவனங்கள் தங்களது பொருட்களை கண்காட்சிப்படுத்தவும் சலுகை விலையில் சந்தைப்படுத்தவும் உள்ளனர்.
கேமிரா மட்டுமின்றி கேமிரா தொடர்பான மென்பொருள்,பின் திரை போன்ற ஸ்டூடியோவிற்கு தேவையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.,மேலும் முன்னனி பிரிண்டர்ஸ் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றனர்.
புராடக்ட் போட்டோகிராபி,போர்ட்ரைட்,பிறந்த குழந்தையை படமெடுத்தல் உள்ளீட்ட பல்வேறு தலைப்பில் போட்டோகிராபி நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்குகள் துறை சார்ந்த நிபுணர்களால் நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சி அரங்கையும் இங்குள்ள மாடல்களையும் சிறப்பாக படம் எடுப்பவர்களுக்கு ,பத்தாயிரம் ரூபாய் பரிசு உள்பட பல பரிசுகள் வழங்கவிருக்கின்றனர்.
குழந்தையை படம் எடுக்க தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை உள்பட பல்வேறு புதுமையான கடைகள் இடம் பெறுகிறது
கொரோனா காரணமாக விழுந்ததும் போட்டோகிராபிதான், இப்போது வீறு கொண்டு எழுந்திருப்பதும் போட்டோகிராபிதான்.போட்டோகிராபி இல்லாமல் எந்த மனிதனின் வாழ்க்கையும் முழுமை அடையாது.ஆர்வம் உள்ள ஏழை எளிய இளைஞனைக்கூட தொழில் முனைவோரக்கும் ,சுயமாக வாழ வழிவகுக்கும் கலைதான் போட்டோகிராபி.
இந்த போட்டோகிராபியால் முன்னுக்கு வந்த மதுரை பாரதி தன்னை முன்னுக்கு கொண்டுவந்த இந்த போட்டோகிராபி மூலம் போட்டோகிராபர்களுக்கு முழு மனதோடு உதவ எடுத்த முடிவுதான் இந்த பிக்சல் போட்டோ அண்ட் வீடியோகிராபி கண்காட்சி.
அவர் தலைவராக இருந்து நடத்தும் இந்த கண்காட்சி, புதுமைக்கு வரவேற்பு தருகிறது, போட்டோகிராபர்களை மேலும் தொழில்நுட்பத்தில் உயர்த்துகிறது, புதியவர்களுக்கு வாழ்வாதாரம் தருகிறது பெண் புகைப்படக்கலைஞர்களுக்கு வரவேற்பு தருகிறது என்பதால் மதுரை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் சங்கமும் (மடீட்சியா) தமிழக தொழில் வணிகத்துறையும் தங்கள் ஆதரவை இந்த கண்காட்சிக்கு வழங்கியுள்ளது.நாளை மறுதினம் மாவட்ட ஆட்சியர் துவக்குகிறார்,மதுரை எம்.பி.,நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
பழைய கால கேமிராக்களின் அணிவகுப்பு,புகைப்படம் தோன்றிய வரலாறு,அரிய புகைப்படங்களின் கண்காட்சி,இலவச கண் மருத்துவ முகாம்,இலவச கேமிரா சர்வீஸ்,வரும் விருந்தினர்களுக்கு திடீர் பரிசு வழங்கல் போன்றவை இருப்பதால் பொதுமக்களும் இந்த கண்காட்சிக்கு உற்றம் சுற்றம் நட்பு புடை சூழ திரண்டு வரலாம்.ஒரு புதிய தொழில்நுட்பத்தின் வரலாறை அறியலாம், மதுரை எப்போதுமே புதுமையை வரவேற்கும் தளம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கலாம்.
காலை பத்து மணி முதல் மாலை 6 மணிவரை கண்காட்சி நடைபெறும்,அனுமதி முற்றிலும் இலவசம்.கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவு ,சிற்றுண்டி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:0452-2523966,94430 57531,98940 52396.
-எல்.முருகராஜ்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X