மாணவி சிந்துவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து, படுத்த படுக்கையாக இருந்த மாணவி சிந்துவுக்கு, உபகரணங்கள் உதவியுடன் நடப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை, முதல்வர் ஸ்டாலின் இன்று(மே 24) நேரில் சென்று, நலம் விசாரித்தார்.சென்னை, கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி, 43. இவரது மனைவி தேவி, 36. இவர்களுக்கு சிந்து என்ற பெண் உள்ளார். கடந்த 2020 டிசம்பரில், தோழி
MK Stalin, Stalin, Sindhu

சென்னை : மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து, படுத்த படுக்கையாக இருந்த மாணவி சிந்துவுக்கு, உபகரணங்கள் உதவியுடன் நடப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை, முதல்வர் ஸ்டாலின் இன்று(மே 24) நேரில் சென்று, நலம் விசாரித்தார்.

சென்னை, கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி, 43. இவரது மனைவி தேவி, 36. இவர்களுக்கு சிந்து என்ற பெண் உள்ளார். கடந்த 2020 டிசம்பரில், தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுதும் சேதமடைந்தது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், உயிர் தப்பிய சிந்து, இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள், தோழியர் உதவியுடன், வீட்டில் இருந்தபடியே படித்து, பிளஸ் 2 தேர்வு எழுதினார். இதுகுறித்து வெளியான செய்தியை தொடர்ந்து, மாணவி சிந்துவின் சிகிச்சைக்கு உதவுவதாக, தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, 19ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மாணவி சிந்து அனுமதிக்கப்பட்டார். மாணவிக்கு, பல்துறை டாக்டர்கள் அடங்கிய குழுவினர், சிகிச்சையை துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து, டாக்டர்கள் கூறியதாவது: மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், சிந்துவை நடக்க வைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் எவ்வித உதவியுமின்றி, தானாக சிந்து நடக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் மாணவி சிந்துவை, முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்த்து நலம் விசாரித்தார்; நம்பிக்கையுடன் இருக்கும்படி சிந்துவுக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, பெரியகருப்பன், கணேசன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
25-மே-202221:09:26 IST Report Abuse
Fastrack மாசு தலைக்கனம் இல்லாமல் இருக்கார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X