கோவை : ''எதிர்காலத்தை தீர்மானிக்க 'தினமலர்' ஏற்படுத்தும் விழிப்புணர்வு மறக்க முடியாதது,'' என, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து பெற்றோர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கே.தரூணிகா, விளாங் குறிச்சி: கருத்தரங்கில் ஒவ்வொரு தலைப்பாக தனித்தனியாக விளக்கியது, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. அதேபோல், அரங்குகளில் வழங்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருந்தன.
கே.ஜெகதீஸ்வரி, உப்பிலிபாளையம்: ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் துறையை, உயர்கல்வியில் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளேன். கருத்தரங்கில் கம்ப்யூட்டர் மற்றும் அதுகுறித்த தகவல்கள், மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அது தவிர, கருத்தரங்கில் பல்வேறு துறைகள், அவற்றில் உள்ள வாய்ப்புகள் குறித்து கூறியது அருமை.
எச்.தீபன், சரவணம்பட்டி: அனைத்து தகவல்களும் பயன் அளிப்பதாக இருந்தது. உயர்கல்விக்கு சிறந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. அரங்குகளில் வழங்கப்பட்ட தகவல்கள் திட்டமிட உதவியது. உயர்கல்வி குறித்து வேறு எங்கும் கிடைக்காத, பல்வேறு அறிய தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்தது. தினமலருக்கு நன்றி.
எஸ்.ரவீணா, அன்னுார்: உயர்கல்விக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதல் வழங்கிய நிகழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு துறையையும் அலசி ஆராய்ந்து, அதன் எதிர்காலம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிபுணர்களை நாம் தேடி போக முடியாத நிலையில், அவர்களை ஒரே இடத்தில் கொண்டு வரச்செய்தது சிறப்பு.
சேரன்மாநகரை சேர்ந்த பெற்றோர் பி.கோவிந்தராஜ் கூறுகையில், ''கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம் குறித்த சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் கிடைத்தது. குறிப்பிட்ட கல்லுாரியில் வழங்கப்படும் படிப்புகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி மிகவும் பயனளிக்கும் விதத்தில் இருந்தது,'' என்றார்.
அன்னுாரை சேர்ந்த பெற்றோர் என்.உமாதேவி கூறுகையில், ''கண்காட்சியில் அனைத்து கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்களுடன், நேரடியாக பேச வாய்ப்பு கிடைத்தது. விண்ணப்பங்களை இங்கே பெற்றதால் அலைச்சல் மிச்சம். பாடத்திட்டங்கள் மட்டும் போதாது என்பதை புரிந்து கொண்டோம். அதிக வாய்ப்புகளை கொண்ட துறையை தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், எதிர்காலத்தில் வாய்ப்புகளை தரும் படிப்பைதான் தேர்வு செய்ய வேண்டும் என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. இது எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE