பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்; பாரதியார் பல்கலை அலுவலர் பதவி நீக்கம்

Added : மே 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கோவை: பத்திரிக்கையாளர்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் கோவை பாரதியார் பல்கலை மக்கள் தொடர்பு அலுவலரை பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.கோவை பாரதியார் பல்கலையில் நடந்த 37வது பட்டமளிப்பு விழா கடந்த 13ம் தேதி நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும்
பத்திரிகையாளர், பணம், பாரதியார் பல்கலை, அலுவலர், பணி நீக்கம்,

கோவை: பத்திரிக்கையாளர்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் கோவை பாரதியார் பல்கலை மக்கள் தொடர்பு அலுவலரை பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலையில் நடந்த 37வது பட்டமளிப்பு விழா கடந்த 13ம் தேதி நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலை சார்பில் வழங்கப்படும் தகவல் தொகுப்புடன் ஒரு கவரில் 500 ரூபாய் வைத்து கொடுத்தனர்.


latest tamil news



கவர்னர் பங்கேற்ற விழாவில், 500 ரூபாய் கொடுத்த நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் காளிராஜிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டு பணம் அடங்கிய கவரை திருப்பி அளித்தனர்.

இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை பாரதியார் பல்லை அமைத்தது. குழுவின் விசாரணையில் பணம் கொடுத்ததற்கு காரணமான மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரையை பாரதியார் பல்கலை நிர்வாகம் பதவியில் இருந்து நீக்கியது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில்,''விசாரணை நிறைவடைந்த நிலையில், அதற்கு காரணமான மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-202206:38:18 IST Report Abuse
ராஜா யாரோ செய்த தவறுக்கு இவர் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
26-மே-202203:46:42 IST Report Abuse
LAX புதிய மக்கள் தொடர்பு அலுவலருக்கு பெயர் கிடையாதா..? பெயர் இன்னும் வைக்கலயா..?
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
26-மே-202200:46:36 IST Report Abuse
David DS விஷயம் என்ன தெரியுமா? பத்திரிக்கையாளர்கள் எதிர் பார்த்தது, கேட்டது ஆயிரம் ரூபாயை, கிடைத்தது அதில் பாதி மட்டுமே. அதனால் பிரச்னை செய்து பெரிதாக்கி விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X