வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'பட்டியல் இன சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய, தி.மு.க.,வைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனியை எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் மகிமைதாஸ்; புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார்: தி.மு.க.,வைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு பாட நுால் கழக தலைவராக உள்ளார். இவர், சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அதற்கான, 'வீடியோ' சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

அதில்,'செருப்பை தலையில் துாக்கிய சமூகத்தைச் சேர்ந்தவரை மேயர் ஆக்கியது தி.மு.க., தலைவர், முதல்வர் ஸ்டாலின் தான்' என, பேசியுள்ளார். இது ஆணவ பேச்சு.
இட ஒதுக்கீடு பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்பட்ட பிச்சை அல்ல. பட்டியல் இனத்தவரை இழிவுப்படுத்தும் விதமாக, ஜாதி வெறியை துாண்டும் வகையில் பேசியுள்ள லியோனியை எஸ்.சி., - எஸ்.சி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE