சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: சிலந்தி வலையின் ரகசியம்

Added : மே 25, 2022 | |
Advertisement
காலை, மாலையில் பூச்சிகள் அதிகளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்க இந்நேரத்தில் மட்டுமே சிலந்தி வலை பின்னுகிறது. வலை வட்ட வடிவிலோ, எண் கோண வடிவிலோ இருக்கும். இதன் வயிற்றின் அடியில் உள்ள 2 சுரப்பிகள் சுரக்கும் திரவத்தால் வலை பின்னுகிறது. இத்திரவம் மீது காற்று பட்டவுடன் மெல்லிய கம்பி போல் மாறி விடுகிறது. இரண்டு சுரப்பிகளில், ஒரு சுரப்பியிலிருந்து வெளியேறும்
அறிவியல் ஆயிரம்: சிலந்தி வலையின் ரகசியம்

காலை, மாலையில் பூச்சிகள் அதிகளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்க இந்நேரத்தில் மட்டுமே சிலந்தி வலை பின்னுகிறது. வலை வட்ட வடிவிலோ, எண் கோண வடிவிலோ இருக்கும். இதன் வயிற்றின் அடியில் உள்ள 2 சுரப்பிகள் சுரக்கும் திரவத்தால் வலை பின்னுகிறது. இத்திரவம் மீது காற்று பட்டவுடன் மெல்லிய கம்பி போல் மாறி விடுகிறது. இரண்டு சுரப்பிகளில், ஒரு சுரப்பியிலிருந்து வெளியேறும் திரவத்தினால் அமைந்த வலையில் பூச்சிகள் விழுந்தால் ஒட்டிக் கொள்ளும். மற்றொன்றில் ஒட்டிக் கொள்ளாது. இதனால் தான் பூச்சிகள் விழுந்ததும் தத்தளிக்கின்றன.


தகவல் சுரங்கம்: பறக்காத பறவை

பறக்காத பறவைகளில் ஒன்று 'கிவி'. இது கோழி இனத்தைச் சேர்ந்த பறவை. 'அப்டெரிகிடே' குடும்பத்தைச் சேர்ந்தது. கோழியின் அளவுதான் இருக்கும். இதன் இறக்கை சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கை வெளியே தெரியாத அளவுக்கு சிறியதாக இருக்கும். இறக்கைகள் இருந்தாலும் இவற்றால் பறக்க முடியாது. ஆனால் மணிக்கு 19 கி.மீ. வேகத்தில் ஓடும். முட்டைகளை ஆண், பெண் இரு பறவைகளும் அடைகாக்கின்றன. நியூசிலாந்திலும் அதைச் சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளிலும் இவை வாழ்கின்றன. நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X