சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இது போக்குவரத்து துறை விவகாரம்!'

Added : மே 25, 2022 | |
Advertisement
தி.மு.க., சார்பில், திராவிட பாசறை பயிலரங்கம் கரூரில் நடந்தது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.அமைச்சர்களிடம், 'பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், 72 மணி நேரத்தில் கோட்டையை முற்றுகையிடுவோம்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது குறித்து,
'இது போக்குவரத்து துறை விவகாரம்!'

தி.மு.க., சார்பில், திராவிட பாசறை பயிலரங்கம் கரூரில் நடந்தது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர்களிடம், 'பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், 72 மணி நேரத்தில் கோட்டையை முற்றுகையிடுவோம்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அமைச்சர் சிவசங்கர், செந்தில் பாலாஜியை பதில் சொல்லும்படி கூறினார். அவரோ, 'நீங்களே பேசுங்கள்' என்றார்.

பின், சிவசங்கர் காதில் ஜெயரஞ்சன் ஏதோ கூற, அதன்பின், மத்திய அரசை குறை சொல்லி சிவசங்கர் பேசினார். நிருபர் ஒருவர், 'அண்ணாமலை விவகாரம்னாலே செந்தில் பாலாஜி தானே கொதிப்பாரு... இப்ப என்ன சிவசங்கரை பேச சொல்றாரு...' என முணுமுணுத்தார்.

உடன் பிறப்பு ஒருவர், 'பெட்ரோல், டீசல் போக்குவரத்து துறை விவகாரம்... மின் துறை சம்பந்தமா இருந்தா தான், அவர் பதில் சொல்வாரு...' எனக்கூறி, அசடு வழிந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X