சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கணவர் தொல்லையால் கடுப்பாகும் அதிகாரிகள்!

Added : மே 25, 2022 | |
Advertisement
''முடியப் போற நேரத்துல நிறுத்தி வச்சுட்டா ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை ரசித்து குடித்தார், குப்பண்ணா.''எதை நிறுத்திட்டாவன்னு விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த வி.கூட்ரோட்டுல, ஆசியாவிலேயே உயர்தர முதல்நிலை கால்நடை ஆராய்ச்சி பூங்கா திறக்க, போன அ.தி.மு.க., ஆட்சியில திட்டம் போட்டா ஓய்... ''இதுக்கு, 1,000 ஏக்கர்
கணவர் தொல்லையால் கடுப்பாகும் அதிகாரிகள்!

''முடியப் போற நேரத்துல நிறுத்தி வச்சுட்டா ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை ரசித்து குடித்தார், குப்பண்ணா.

''எதை நிறுத்திட்டாவன்னு விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த வி.கூட்ரோட்டுல, ஆசியாவிலேயே உயர்தர முதல்நிலை கால்நடை ஆராய்ச்சி பூங்கா திறக்க, போன அ.தி.மு.க., ஆட்சியில திட்டம் போட்டா ஓய்... ''இதுக்கு, 1,000 ஏக்கர் நிலத்தை தேர்வு செஞ்சதோட, 2020 பிப்ரவரியில, 1,300 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி வேலையை ஆரம்பிச்சா... பூங்காவுக்கு தேவையான தண்ணீர் தடையில்லாம கிடைக்க, 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர திட்டத்தையும் செஞ்சு முடிச்சுட்டா ஓய்...

''வேலைகள், 85 சதவீதம் முடிஞ்ச நேரத்துல ஆட்சி மாறிடுத்து... தி.மு.க., அரசு, அந்த பணியை கிடப்புல போட்டுடுத்து ஓய்... இன்னும், 300 கோடி ரூபாய் செலவு செஞ்சா, கால்நடை ஆராய்ச்சி பூங்கா பேஷா முடிஞ்சுடும்... ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்குமாம்... முந்தைய ஆட்சியில கொண்டு வந்த திட்டம்கறதால, யாரும் கண்டுக்காம இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கெஞ்சிக் கூப்பிட்டாலும் வர மாட்டேங்கிறாங்க...'' என, அடுத்த தகவலை சொன்னார், அந்தோணிசாமி.

''யாருப்பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தமிழகம் முழுக்க தோட்டக்கலை துறை சார்பா பண்ணை மகளிர், நிலமில்லாத விவசாயிகளுக்கு பூங்கொத்து தயாரிப்பு, பூ அலங்காரம், தேனீ வளர்ப்புக்கு இலவச பயிற்சி தர்றாங்க... ''மொத்தம், 30 நாள் பயிற்சி... இதுக்கு ஊக்கத் தொகையா, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கணக்கு போட்டு, பயிற்சி முடிஞ்சதும் வங்கி கணக்குல, 'டிபாசிட்' செஞ்சிடுவாங்க...

''ஒரு 'பேட்ச்'ல 20 பேர் வீதம் ஒவ்வொரு மையத்துக்கும் இரண்டு, மூணு பேட்ச்னு, 'டார்கெட்' வச்சிருக்காங்க... ஆனா, எந்த மையத்துக்கும் ஈ காக்கா கூட வரமாட்டேங்குது... கிராம மக்களை கூவிக் கூவி கூப்பிட்டும், 'அந்த 100 ரூபாயை அன்னைக்கே கையில கொடுத்தா வர்றோம்'னு பேரம் பேசுறாங்க...

''சென்னையில இருந்து தான் பணம் டிபாசிட் செய்யப்படும்கிறதால, அதிகாரிகளால ஒண்ணும் செய்ய முடியலை... 'இவங்களை கெஞ்சுறதுக்கு பதிலா டிகிரி, டிப்ளமா படிச்சவங்களை கூப்பிட்டு பயிற்சி கொடுத்தா, அவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும்... பயிற்சியும் நடத்தின மாதிரியிருக்கும்'னு அதிகாரிகள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''வீட்டுக்காரர் ஆட்டம் தாங்க முடியலை வே...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''காஞ்சிபுரத்துல, 'வணக்கத்துக்குரிய' ஆளுங்கட்சி பெண்மணியின் வீட்டுக்காரர் வச்சது தான் சட்டமா போயிட்டு... மனைவி ஆபீசை தன் கட்டுப்பாட்டுல வச்சிக்கிட்டு, அதிகாரிகளுக்கு சகட்டுமேனிக்கு, 'ஆர்டர்' போடுதாரு வே... ''தீர்மானம் முதல் டெண்டர் வரை, எல்லாத்துலயும் மூக்கை நுழைக்காரு... வீட்டம்மா ஆய்வுக்கு போறப்பவும், கூடவே போய் அதிகாரிகளை வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்காரு... சில நியாயமான அதிகாரிகள், 'இவருக்கு நாம ஏன் பதில் சொல்லணும்'னு சூடாயிடுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

அந்த பக்கமாக, பைக்கில் வந்தவரை பார்த்து, ''யுவராஜ் சார் செத்த நில்லுங்கோ... மகாலட்சுமி கோவில்கிட்ட எறக்கி விட்டுடறேளா...'' என, 'லிப்ட்' கேட்டபடியே குப்பண்ணா நகர, சபை கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X