பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 25, 2022 | |
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழக ரேஷன் அரிசி, ஆந்திரா வழியாக, கர்நாடகாவுக்கு பெருமளவு கடத்தப்படுகிறது என, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
பேச்சு, பேட்டி, அறிக்கை


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

தமிழக ரேஷன் அரிசி, ஆந்திரா வழியாக, கர்நாடகாவுக்கு பெருமளவு கடத்தப்படுகிறது என, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பக்கத்து மாநில முன்னாள் முதல்வர், நம்ம அரசின் பலவீனத்தை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியிருக்கிறதை விட, வெட்கக்கேடு வேறு வேண்டுமா?
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி:

திருநெல்வேலியில் குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் அதிக அளவு கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சிக்கு வந்து ஒரு வருஷமாகிடுச்சு... விதிகளை மீறிய குவாரிகளை கண்டும், காணாம இருந்துட்டு, இப்ப வீர வசனம் பேசுவது, குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டிய கதையா இருக்கு!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:

தமிழக அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவல நிலை மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தமிழிசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை செயல்படாத நிலைக்கு தள்ளியுள்ள தி.மு.க., அரசின் அலட்சிய போக்கு கண்டனத்துக்குரியது. 'தமிழுக்காக உயிரையே கொடுப்போம்' என பேசுவது மேடைகளில் மட்டும் தான் என்பது, இதன்மூலம் பட்டவர்த்தனமா விளங்குது!
விருதுநகர் தொகுதி காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி:

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதை ஏற்க முடியாது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். அடுத்து, சிறையில இருக்கிற மீதம் ஆறு பேரையும் விடுவிக்க, தி.மு.க., அரசு ஆலோசனை நடத்திட்டு இருக்குதே... அதுக்கும் சேர்த்து, கண்டனத்தை தெரிவிச்சிடுங்க... உங்க, 'லட்டர் பேடு'ல ஒரு தாளாவது மிஞ்சும்!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் கவிஞர் சினேகன் அறிக்கை:

பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில், 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது ஏழை, நடுத்தர மாணவர்களின் உயர் கல்விக் கனவை சிதைத்துவிடும். எனவே, தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். நியாயமான கோரிக்கை தான்... ஆனா, பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளை தி.மு.க., முக்கிய புள்ளிகள் நடத்திட்டு இருக்காங்களே... அதனால, நிராகரிப்பது சந்தேகம் தான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X