சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மா.கம்யூ.,வைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்: பா.ஜ.,வுக்கு ஆட்களை அனுப்பும் இடமாக காங்கிரஸ் மாறி வருகிறது. மத்திய அமைச்சர், எம்.பி., பதவிகளுக்காக காங்., தலைவர்கள் பா.ஜ.,வில் இணைகின்றனர். இதனால், கட்சி வீழ்ச்சி அடைந்துள்ளது.டவுட் தனபாலு: நீங்க ஆளும் கேரளாவுல, காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சி... எலியும், பூனையுமா அடிச்சுக்குவீங்க... அப்பேர்ப்பட்ட நீங்களே
'டவுட்' தனபாலு


மா.கம்யூ.,வைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்:

பா.ஜ.,வுக்கு ஆட்களை அனுப்பும் இடமாக காங்கிரஸ் மாறி வருகிறது. மத்திய அமைச்சர், எம்.பி., பதவிகளுக்காக காங்., தலைவர்கள் பா.ஜ.,வில் இணைகின்றனர். இதனால், கட்சி வீழ்ச்சி அடைந்துள்ளது.

டவுட் தனபாலு: நீங்க ஆளும் கேரளாவுல, காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சி... எலியும், பூனையுமா அடிச்சுக்குவீங்க... அப்பேர்ப்பட்ட நீங்களே வேதனைப்படுற அளவுக்கு, காங்கிரஸ் நிலைமை ஆகிடுச்சே... போற போக்கை பார்த்தா, பா.ஜ.,வுக்கு ஆள் எடுக்கும் ஏஜன்சி அளவுக்கு காங்கிரஸ் சுருங்கிடுமோன்னு, 'டவுட்'டா இருக்குது!

***


பத்திரிகை செய்தி:

'அரசு ஒப்பந்த பணிகள் வழங்க, 1 சதவீதம் கமிஷன் வேண்டும்' என, பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லா கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் பகவந்த் மான் நீக்கியுள்ளார். தொடர்ந்து, விஜய் சிங்லா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

டவுட் தனபாலு: ம்கூம்... 20 முதல் 30 சதவீதம் கமிஷன் வாங்குற மலைமுழுங்கி மகாதேவன்கள் மத்தியில, வெறும் 1 சதவீதம் வாங்கி மாட்டிக்கிட்டாரே... அதே நேரம், அமைச்சரிடம் ராஜினாமா கடிதம் வாங்கிட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணை கமிஷன் போட்டு இழுத்தடிக்காம, பதவி நீக்கம், உடனே கைதுன்னு அதிரடி நடவடிக்கை எடுத்த ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!

***


சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்:

விசா நடைமுறையில், சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை. விசா வழங்கக்கூடிய அதிகாரி எவரும் எனக்கு தெரியாது. கடந்த ஏழு ஆண்டுகளில், எவ்வித ஆதாரமும் இல்லாமல், ஆறு முறை சோதனைகளுக்கு உள்ளாகி உள்ளேன். மத்திய அரசின் அமைப்புகள், ஒரு கட்சியின் அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படும் வகையில் மாறியுள்ளது வருத்தத்துக்குரியது.

டவுட் தனபாலு: தமிழக காங்கிரஸ்ல உங்களையும் சேர்த்து எட்டு எம்.பி.,க்கள் இருக்காங்க... மத்தவங்களை எல்லாம் விட்டுட்டு, உங்களை மட்டும் ஏன் குறி வைக்கணும்... மடியில கனம் இல்லாத நீங்க, இந்த மாதிரி சோதனைகளை துணிச்சலா எதிர்கொள்றதை விட்டு, இப்படி புலம்பும்போது தான், 'டவுட்' கூடுதலாகுது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
26-மே-202213:01:38 IST Report Abuse
Suppan நம்ம ஊருக்கு வாங்க. எவ்வளவு கமிஷன் கேட்கலாம் கொடுப்பாங்க என்ற மார்க்கெட் நிலவரம் தெரியும். சும்மா 1% 2% எல்லாம் வாங்கி எங்க மானத்த வாங்காதீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X