இதே நாளில் அன்று

Added : மே 25, 2022 | |
Advertisement
மே 26, 1934 கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 1891 செப்., 15ல், சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் செண்பகராமன். இளமையில் சிலம்பம், வாள் வீச்சு கலைகளில் தேறியவர், மேல்படிப்பை, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி பல்கலைகளில் முடித்தார்.பள்ளிப் பருவத்தில் விடுதலைக்காக, 'ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்திய செண்பகராமன், வெளிநாட்டில்
 இதே நாளில் அன்று


மே 26, 1934

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 1891 செப்., 15ல், சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் செண்பகராமன். இளமையில் சிலம்பம், வாள் வீச்சு கலைகளில் தேறியவர், மேல்படிப்பை, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி பல்கலைகளில் முடித்தார்.

பள்ளிப் பருவத்தில் விடுதலைக்காக, 'ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்திய செண்பகராமன், வெளிநாட்டில் இருந்த போதும், நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். வியன்னா மாநாட்டில் இவர், 'ஜெய்ஹிந்த்' முழக்கத்தை எழுப்பியதும், நேதாஜி வழிமொழிந்தார்.

கடந்த, 1914ல், ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பலான, 'எம்டனி'ல் உதவி பொறியாளராகி, பிரிட்டனின் சென்னை துறைமுகம், கோட்டை, எண்ணெய் கிடங்குகளில் பீரங்கி தாக்குதல் நடத்தினார். முதல் உலகப்போரில் வென்ற ஹிட்லர், 'இந்தியர்களுக்கு நாட்டை ஆளும் திறமை இல்லை' என்றார். ஹிட்லரிடம் எதிர்வாதம் செய்து, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வைத்தார். இதை வெறுத்த 'நாஜி' படையினர், அவருக்கு உணவில் விஷம் வைத்து, 1934ல் இதே நாளில், அவரது, ௪௩வது வயதில் கொன்றனர்.

'ஜெய்ஹிந்த்' முழக்கத்தை முதலில் துவக்கிய செண்பகராமனின் நினைவு தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X