சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சரியான எதிர்க்கட்சியாக இல்லை!

Added : மே 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நேரத்தில், முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயிலரை அழைத்து, 'அந்த அம்மா மிகவும் செல்வாக்காக வளர்ந்தவங்க; அவங்களுக்கு சிறையில் நல்ல வசதி பண்ணிக் கொடுக்க வேண்டும்' என்று சொன்னார். அந்த அளவுக்கு மனிதாபிமான மிக்க
சரியான எதிர்க்கட்சியாக இல்லை!

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நேரத்தில், முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயிலரை அழைத்து, 'அந்த அம்மா மிகவும் செல்வாக்காக வளர்ந்தவங்க; அவங்களுக்கு சிறையில் நல்ல வசதி பண்ணிக் கொடுக்க வேண்டும்' என்று சொன்னார். அந்த அளவுக்கு மனிதாபிமான மிக்க தலைவர் கருணாநிதி' என்றார்.
ஆனால், ஜெயலலிதாவை கைது செய்த போது, அவருக்கு சிறையில் முதல் வகுப்பு கொடுக்காமல், சாதாரண வகுப்பு தான் கொடுக்கப்பட்டது. இதை சிறையிலிருந்து விடுதலையான உடன் ஜெயலலிதாவே கூறினார். 'கொசுத் தொல்லையால் அவதிப்பட்டேன். ஜன்னல் வழியாக வந்த மழை நீரில், முழுமையாக நனைந்து விட்டேன். பெருச்சாளி தொல்லையால், இரவு முழுதும் துாங்க முடியாமல் அவதிப்பட்டேன். மனிதாபிமான முறையில் எனக்கு போர்வையும், காபியும் கொடுத்த ஜெயிலர் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார்' என்றும், மனவேதனையுடன் பேட்டி அளித்தார் அவர்.
துரைமுருகன் சொன்னதை போல, உண்மையிலேயே கருணாநிதிக்கு மனிதாபிமானம் இருந்திருந்தால், ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரின் வேதா நிலையம் இல்லத்திலேயே, வீட்டுக் காவலில் வைத்திருக்கலாமே... சென்னை மத்திய சிறையில் ஏன் அடைக்க வேண்டும்? சட்டசபையில் எதை எதையோ கண்டித்து, வெளிநடப்பு செய்த அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் பழனிசாமியும், பன்னீர் செல்வமும், தங்கள் கட்சி தலைவி பற்றி, துரைமுருகன் சொன்ன தவறான தகவலை கண்டித்து வெளிநடப்பு செய்யவில்லை. அ.தி.மு.க.,வின் இரட்டை தலைமை, தங்களது எதிர்க்கட்சி பணியை சரியாக செய்வதில்லை என்பதற்கு, இதை விட எடுத்துக்காட்டு வேறு எதுவும் இருக்க முடியாது.

***


காமராஜர் திட்டத்திற்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதா?

பழ.சுந்தரமூர்த்தி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவையில் நடந்த, தி.மு.க., பயிலரங்கத்தில் பேசிய, அக்கட்சியின் எம்.பி., - ஆ.ராசா, 'தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது. 1996ல், சமத்துவபுரத்தை கருணாநிதி உருவாக்கினார். 'எதைக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பர் என்பதை அறிந்து, பள்ளியில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் காமராஜர். ஆனாலும், அவர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடலே' என்று கூறியுள்ளார்.
நல்லவேளை... காமராஜர் தற்போது நம்மிடையே இல்லை... ஒருவேளை இருந்திருந்தால், 'எங்களை பார்த்து தான், அவர் காப்பி அடித்தார்' என, தி.மு.க.,வினர் சொல்லி இருந்தாலும் ஆச்சரியமில்லை. காமராஜர் செய்த சாதனைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், 1955 மார்ச் 27ல், சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டை, காமராஜர் துவக்கி வைத்தார். அப்போது, கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலுவிடம், 'ஏழை குழந்தைகள் அனைவருக்கும், இலவச மதிய உணவு வழங்க வேண்டும் எனில், என்ன செலவாகும்?' என்று விசாரித்தார்.

'ஐந்து லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்றால், 1 கோடி ரூபாய் செலவாகும்' என்றார் அவர். பின், மாநாட்டில் பேசிய காமராஜர், 'தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு, இலவசமாக மதிய உணவு வழங்கப்படும்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 'அடுத்தடுத்த ஆண்டுகளில், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, செலவு அதிகமாகலாம். அதற்கென தனியாக வரி போடலாம்.

ஏனெனில், நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை ஒப்பிடும் போது, இது பெரிய தொகையே இல்லை. தேவைப்பட்டால், எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, மதிய உணவு திட்டத்திற்காக பிச்சை எடுக்கவும் சித்தமாக இருக்கிறேன்' என, உணர்ச்சிவசப்பட்டு கூறினார். இதையடுத்து, 1956ல், பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில் முதன் முதலாக, இலவச மதிய உணவு திட்டம் துவங்கப்பட்டது. இந்த நிகழ்வை எல்லாம் பார்க்கும் போது, 'இது காமராஜர் திட்டம்; காமராஜர் மாடல்' என்று சொல்வது தான் சாலப் பொருந்தும். வேறு எந்த மாடலும் இல்லை. குறிப்பாக, திராவிட மாடல் இல்லை.

மோடி அரசின் பல திட்டங்களுக்கு, 'திராவிட மாடல்' அரசின் திட்டம் என, 'ஸ்டிக்கர்' ஒட்டுவது போல, காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டாதீங்க ராசா அவர்களே!

***


எல்லாரும் மனுநீதிச் சோழன் அல்ல!

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீதிபதிகள் துறவிகள் அல்ல... சில நேரங்களில், பணிச்சுமை காரணமாக நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது மாதிரியான சூழ்நிலையை சந்தித்து இருக்கிறேன். அந்த தருணத்தில், நான் கோபமாக பேசிய வார்த்தைகள், சிலரை புண்படுத்தி இருக்கலாம்; அதற்காக, இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாரபட்சமின்றியே தீர்ப்பு வழங்குகிறோம். அந்தத் தீர்ப்பு, ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், இன்னொரு தரப்புக்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகராஜ் ராவ் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை, விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில், நாகராஜ் ராவும் ஒருவர். நீதிபதிகளின் தீர்ப்புகள் மறுபரிசீலனைக்கு உள்ளாவதை, எத்தனையோ வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இதற்கு முன்னும் ஓய்வு பெறும் நிலையில், நீதிபதிகள் சிலர் வழங்கிய தீர்ப்புகள், இன்றும் விவாதப் பொருளாகவே இருக்கின்றன. பேரறிவாளனை விடுதலை செய்யும் முன், ராஜிவுடன் பரலோகம் போன காவல் துறை அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் மற்றும் உடல் சிதறி சின்னாபின்னமாகி, கரிக்கட்டையாகி இறந்து கிடந்தவர்களின் குடும்பத்தினரை பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறிதும் கவலைப்படவில்லை; அது தான் பொதுமக்களுக்கு பெரும் வருத்தம் தருவதாக உள்ளது.

'நாட்டாமை தீர்ப்பை மாற்று' என, கிராமங்களில் பஞ்சாயத்து பண்ணும் பேர்வழிகளை மிரட்டுவது போல, உச்ச நீதிமன்ற நீதிபதியை யாரும் மிரட்ட முடியாது. நீதிபதிகளை துறவிகள் என மட்டும் அல்ல... கடவுள்கள் என்று அழைக்கவும் முடியாது. ஏனெனில், கடவுள் வழங்கும் தீர்ப்பு எப்போதும் நியாயமானதாகவே இருக்கும். சாட்சிகள் எதிராக இருந்தால், கற்புக் கரசியரையும் நெறி கெட்டவர்கள் என்று தீர்ப்பு வழங்கியோர் உண்டு.

வக்கீல்களின் வாக்கு சாதுர்யத்தால், எத்தனையோ குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டும் இருக்கின்றனர். நீதிபதிகளே லஞ்சம் வாங்கி கைதாகும் கொடுமையும், நம் நாட்டில் நடக்கிறது. அப்புறம் எப்படி எல்லா நீதிபதிகளும், மனுநீதிச் சோழன் மாதிரி, பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குவர் என்று எதிர்பார்க்க முடியும். எல்லாம் அவரவர் தலைவிதியே! 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
27-மே-202200:09:42 IST Report Abuse
Murthy பேரறிவாளன் தண்டனைக்காலம் முடிந்துதான் விடுதலையானார்...
Rate this:
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
26-மே-202211:23:07 IST Report Abuse
T.S.SUDARSAN பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் மதிய உணவு திட்டத்தை திரு என் எம் ஆர் சுப்புராமன் ,மதுரை காந்தி அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு தமிழ்நாடு அணைத்து பள்ளிகளில் நிறைவேற்றினர். சௌராஷ்ட்ரா மதத்தை சேர்ந்த திரு என் எம் ஆர் சுப்புராமன் அவர்களும் திரு தேசபந்து துளசிராம் அவர்களும் மதுரை சௌராஷ்டிர பள்ளிக்கூடத்தில் சுதந்திரத்திற்கு முன்பே மதிய உணவு திட்டத்தை நடத்திகொண்டு இருப்பவர்கள். இதை மேலும் சிறப்பாகியவர் எம் ஜீ ஆர் அவர்கள். இதுவே ஜெயலலிதாவால் தொடரமுடிந்தது. ஆகவே மத்திய உணவு திட்டம் மதுரை சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்தது. நான் ஒரு சௌராஷ்ட்ரியன். இதை கூறிக்கொள்ளும்போது பெருமையடைகிறேன். அந்த மதுரை சௌராஷ்ட்ரா பள்ளியில் நான் 6வது முதல் 10 வகுப்பு வரையும் 1962 டு 1968 நானும் அந்த பள்ளியில் படித்தபோது மதிய உணவு சாப்பிட்டேன். என்னால் அதை மறக்கமுடியாது. கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். இப்போது எனக்கு வைத்து 69 நடைபெறுகிறது. எங்கள் சமூகத்திற்கு நன்றி.
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
26-மே-202202:30:40 IST Report Abuse
seshadri சரியான எதிர் கட்சி இல்லை என்று வருத்தப்பட்டு எழுதுகிறீர்கள் கொஞ்சமாவது அவர்களது கஷ்டத்தை நினைத்து பார்த்தீர்களா ஏதாவது பேசினால் பின்னர் ரைட் பறிமுதல் என்று லஞ்சகத்தில் சேர்த்த சொத்துக்கள் எல்லாம் இழக்க நேரிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X