மனைவிக்காக வாகனம்: பிச்சைக்காரருக்கு பாராட்டு

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
போபால்: மூன்று சக்கர சைக்கிளை ஓட்ட முடியாமல், முதுகு வலியால் மனைவி துன்பப்படுவதை பார்த்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர், 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து புதிய, 'மொபெட்' வாங்கி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம், சிசிந்த்வாராவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹு. உடல் ஊனமுற்ற இவர், தன் மனைவி முன்னியுடன் சேர்ந்து, சிசிந்த்வாராவில் பிச்சை எடுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால்: மூன்று சக்கர சைக்கிளை ஓட்ட முடியாமல், முதுகு வலியால் மனைவி துன்பப்படுவதை பார்த்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர், 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து புதிய, 'மொபெட்' வாங்கி உள்ளார்.



latest tamil news



மத்திய பிரதேச மாநிலம், சிசிந்த்வாராவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹு. உடல் ஊனமுற்ற இவர், தன் மனைவி முன்னியுடன் சேர்ந்து, சிசிந்த்வாராவில் பிச்சை எடுத்து வருகிறார்.சாஹுவால் நடக்க முடியாது என்பதால், மூன்று சக்கர சைக்கிளில் அவரை உட்கார வைத்து, அவருடைய மனைவி ஓட்டிச் செல்வார். இவ்வாறு நகரின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் பிச்சை எடுத்து வந்தனர்.

கிடைத்த இடத்தில் படுத்து துாங்குவர்.இவ்வாறு நீண்ட காலமாக மூன்று சக்கர சைக்கிளை ஓட்டியதால், முன்னிக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. மூன்று சக்கர சைக்கிளை ஓட்டுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து, பணத்தை சேமித்து வைத்து, புதிய மொபெட் ஒன்றை, 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார், சாஹு.


latest tamil news



அவரால் நடக்க முடியாது என்பதால், அதற்கு ஏற்ப அந்த மொ பெட், மூன்று சக்கரங்கள் பொருத்தி வடிவமைக்கப்பட்டு உள்ளது.இப்போது சாஹு தன் மனைவியை பின் சீட்டில் உட்கார வைத்து பிச்சை எடுக்க செல்லும், 'வீடியோ' சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மனைவி மீதான சாஹுவின் அன்பு, அக்கறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-மே-202206:03:52 IST Report Abuse
Sanny ஆஸ்திரேலியா, மேல் நாடுகளில் உடல்நிலை நல்லாக இருந்தும் வேலை செய்யாமல், டோல் எடுத்து வாழும் மனிதரை விட மேலானவர்கள் இந்த தம்பதியினர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X