சென்னை: பிரதமர் மோடி இன்று (மே 26) சென்னை வருவதையொட்டி ஈ.வே.ரா. சாலை, தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சாலை வரையிலும் உள்ள நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் சாலை பயணத்தை திட்டமிட்டு கொள்ள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இன்று (மே 26) சென்னை வருகிறார். இதற்கான நிகழ்ச்சிகள் பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

ஆகையால் அந்த சாலைகளில் செல்லும் வாகனஓட்டிகள் மாற்று வழியில் பயணம் செய்ய திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். விழாவுக்காக மத்திய அரசு சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE