இணையவழி தாக்குதலால் விமான சேவை பாதிப்பு

Added : மே 25, 2022 | |
Advertisement
புதுடில்லி-தனியார் விமான நிறுவனமான, 'ஸ்பைஸ்ஜெட்' இணையதளத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அதன் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பல விமான சேவைகள் நேற்று காலையில் பாதிக்கப்பட்டன. அதையடுத்து சமூக வலை தளத்தில் அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.'நிறுவனத்தின் இணையதளத்தில் மர்மநபர்கள் நேற்று
இணையவழி தாக்குதலால் விமான சேவை பாதிப்பு

புதுடில்லி-தனியார் விமான நிறுவனமான, 'ஸ்பைஸ்ஜெட்' இணையதளத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அதன் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பல விமான சேவைகள் நேற்று காலையில் பாதிக்கப்பட்டன. அதையடுத்து சமூக வலை தளத்தில் அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.'நிறுவனத்தின் இணையதளத்தில் மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனால், விமான சேவை பாதிக்கப்பட்டது. அது சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது' என, நேற்று காலையில் அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டது.ஆனால், விமானத்திலும், விமான நிலையத்திலும், பல மணி நேரம் காத்திருப்பதாக, பல பயணியர், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். குடிநீர், உணவு ஏதும் வழங்கப்படவில்லை என்றும், சரியான தகவல்கள் தரப்படவில்லை என்றும் பலர் குற்றஞ்சாட்டி பதிவிட்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X