என்ன சொல்லப் போகிறார் மோடி?; எதிர்பார்ப்பில் தி.மு.க., கூட்டணி!

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், பல்வேறு துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்; நிறைவுற்ற பணிகளை, நாட்டிற்கு அர்ப்பணித்து, சிறப்புரை ஆற்றுகிறார். கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் பங்கேற்க, தமிழக பா.ஜ., சார்பில் அமைப்பு ரீதியாக உள்ள, 55 மாவட்டத்திற்கும் தலா 50 பேருக்கு மட்டும்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், பல்வேறு துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்; நிறைவுற்ற பணிகளை, நாட்டிற்கு அர்ப்பணித்து, சிறப்புரை ஆற்றுகிறார்.latest tamil newsகவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் பங்கேற்க, தமிழக பா.ஜ., சார்பில் அமைப்பு ரீதியாக உள்ள, 55 மாவட்டத்திற்கும் தலா 50 பேருக்கு மட்டும், அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ., தொண்டர்கள் 500 பேர், பிரதமர் மோடி உருவம் பொறித்த பனியன் அணிந்து பங்கேற்க உள்ளனர்.

மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் ஏற்பாட்டில், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி, மதுரை தொகுதியில் போட்டியிட அழைப்பு விடுக்கும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்ள், தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்டப்பட உள்ளன. பிரதமர் மோடி வரும் வேளையில், மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன; ஆனால், போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய பேச்சில் இடம்பெற உள்ள அரசியல் விவகாரங்கள் குறித்த எதிர்பார்ப்பு, தமிழக கட்சிகளிடம் அதிகரித்து உள்ளது.இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், பிரதமர் மோடி வருகை, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பு போன்ற விஷயங்கள், தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரும் நேரத்தில், தி.மு.க., அரசின் செயல்பாடுகள் குறித்து, ஐ.ஏ.என்.எஸ்., மற்றும் 'சி - வோட்டர்' நடத்திய கருத்து கணிப்புகளும் வெளிவந்துள்ளன. அதில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகள், 85 சதவீதம் திருப்தி அளித்திருப்பதாக, கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil newsகருத்துக் கணிப்பின் முழு விபரமும் மத்திய உளவுத் துறை வாயிலாக, பிரதமர் மோடிக்கு சென்றிருக்கும் என, தி.மு.க., தரப்பில் நம்பப்படுகிறது. அதனால், பிரதமர் பேச்சில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவிப்பார் என, அக்கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது

.அது நடந்தால், கூட்டணியில் குழப்பம் அதிகரிக்கும் என்பதால், ஆளும் கூட்டணி கட்சிகள், பிரதமர் என்ன பேசப் போகிறார் என்பதை அறிய காத்திருக்கின்றன.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-மே-202215:57:19 IST Report Abuse
Lion Drsekar இப்போது எதுவும் இருக்காது கரணம் பத்ம ஸ்ரீ பட்டம் கொடுக்க தலைவர் தேர்தல் நடத்தவேண்டி இருக்கிறது . அதற்க்கு ஒரு அணி தேவைப்படுகிறது . இத்தனை ஆண்டுகளாக நடைபெறாத மாறுதலா இனி ஏற்படப்போகிறது . சாதனைகள் சென்றடையவில்லை, நற்பயனும் சாதனையும் ஒருவர் செய்தால் அது பொருந்தும், மற்ற அணியினர் செய்தால் அது தேசிய கொள்கைக்கு எதிரான செயல்பாடுகள், நாக்கு , மனம், கொள்கை, செயல்பாடுகள் எல்லாமே எந்த நேரமும் மாற்றத்துக்கு உட்பட்டது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
26-மே-202215:49:34 IST Report Abuse
Rengaraj ஜனாதிபதி தேர்தலில் நம்முடைய தயவு தேவை என்று தி,மு.க நினைக்கும். அதை மனதில் வைத்து மோடிஜியும் இவர்களை ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் மத்திய அரசின் சாதனைகளை மீண்டும் பட்டியிலுடுவார். அதை மாநில அரசு ஒத்துழைப்புடன் நடக்க வேண்டும் என்று சொல்வார். தாங்கள் வலியுறுத்த்தியதால் மட்டுமே திட்டங்கள் ஆரம்பிக்க மோடி வந்தார் என்றும் திட்டங்களை நம்மை நம்பி தான் மத்திய அரசு ஆரம்பித்தது என்று இவர்களாவாகவே நினைத்துக்கொள்வார்கள். அடுத்த சில நாட்களில் மாநில அரசின் சாதனை என்று இந்த திட்டங்கள் வேறு வடிவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மக்கள் மன்றத்தில் சொல்வார்கள். உன்னை நம்பி நான் இல்லை என்று மோடி சொல்வதாக அண்ணாமலை கூறுவார். எங்களை நம்பினால்தான் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று இவர்கள் சொல்வார்கள். வரும் நாட்களில் வேடிக்கை அறிவிப்புகள் இருபுறமும் வெளிவரும் நிறைய பார்க்கலாம். காதுகுளிர கேட்கலாம்.
Rate this:
Cancel
26-மே-202214:20:32 IST Report Abuse
ராமகிருஷ்ணன் பணம் சுருட்டுவதற்கு எத்தகைய ஈன செயல்களையும் செய்ய தயங்காதவர்கள் திமுகவினர். மோடிஜி வருகையை திமுக அல்லக்கை ஊடகங்கள் எப்படி சொல்கிறார்கள் என்பதை வைத்து அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X