சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பெண் சிசுக்கொலை தடுக்கப்படவேண்டும்!

Added : மே 26, 2022 | |
Advertisement
தேசிய குற்றப் புலனாய்வுத் துறை இணை இயக்குனர் ஹேமா கார்த்திகா: பெண்களுக்கு குடும்பங்களில், பல்வேறு சிரமங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளும், வருங்காலத்தில் தங்களைப் போல் கஷ்டப்படுவரோ என்ற எண்ணத்தில், பெண் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்; அது தவறானது. பெண்கள் வாழ்க்கை ஒரு போராட்டம் தான்; அதில், போராடித் தான் வெற்றி பெற
பெண் சிசுக்கொலை தடுக்கப்படவேண்டும்!

தேசிய குற்றப் புலனாய்வுத் துறை இணை இயக்குனர் ஹேமா கார்த்திகா: பெண்களுக்கு குடும்பங்களில், பல்வேறு சிரமங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளும், வருங்காலத்தில் தங்களைப் போல் கஷ்டப்படுவரோ என்ற எண்ணத்தில், பெண் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்; அது தவறானது.

பெண்கள் வாழ்க்கை ஒரு போராட்டம் தான்; அதில், போராடித் தான் வெற்றி பெற வேண்டும்.போராடி சாதித்தவர்கள் இங்கே ஏராளம். அப்படிப்பட்டவர்களை, 'ரோல் மாடலாக' காட்டி, பெண் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுக்க, பெற்றோர் முன்வர வேண்டும். பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்தால், மகளிருக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் என்பதை உணர வேண்டும். எனவே, பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

பெண் குழந்தை பிறப்பதை சந்தோஷமாக பார்க்கும் மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் சபிதா: பள்ளி, கல்லுாரி, பணிபுரியும் அலுவலகம் என அனைத்து இடங்களிலும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளன. இதனால், பயந்துபோகும் பெற்றோர், பெண் குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்கின்றனர். அதன் விளைவு தான், பெண் சிசுக்கொலை. பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்தால், எந்தப் பெற்றோரும் அவர்களை வெறுக்க மாட்டார்கள்.

தற்போது, இந்தியாவில் பல மாநிலங்களில், பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பலரும் உ.பி., ஒடிசா, ஜார்க்கண்ட், பீஹார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு சென்று, 7,௦௦௦ முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து, பெண்களை வாங்கி வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். பெண்கள் சந்தைப் பொருளாக ஆக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைகள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, திருமணம் செய்ய பெண் கிடைக்காத காரணத்தால், அவர்களின் பெற்றோரே கேரள மாநிலத்திற்கு சென்று, பெண் பார்த்து திருமணம் செய்து அழைத்து வருகின்றனர்.இந்த நிலைமை பரவாமல் இருக்க, பெண் சிசுக்கொலைகளை தடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X