ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு: சசிகலாவுக்கு பழனிசாமி 'செக்'

Updated : மே 26, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் இருவரை தேர்வு செய்வதில், அக்கட்சியில் நீண்ட இழுபறி நீடிக்கிறது. வேட்பாளர் தேர்வில், தென் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளதால், தென் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், சென்னையில் முகாமிட்டுள்ளனர்.வன்னியர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் இருவரை தேர்வு செய்வதில், அக்கட்சியில் நீண்ட இழுபறி நீடிக்கிறது.



latest tamil news



வேட்பாளர் தேர்வில், தென் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளதால், தென் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், சென்னையில் முகாமிட்டுள்ளனர்.வன்னியர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், ஏற்கனவே பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்கலாம் என, பழனிசாமியும் விரும்புகிறார். அதற்குக் காரணம், தென் மாவட்டங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களில், முக்குலத்தோர் அதிகமாக உள்ளனர் என்பது தான். மேலும், முக்குலத்தோர் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது என்ற எதிர்மறை பிரசாரத்தை, சசிகலா, தினகரன் கையில் எடுப்பதையும் தடுக்கலாம் என, பழனிசாமி கருதுகிறார்.


latest tamil news



இதனால், அச்சமுதாய வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பை, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடமே, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஒப்படைத்துள்ளார். அதோடு சேர்த்து, முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, பன்னீர்செல்வம் விரும்புகிறார். ஜாதி ரீதியாக வேட்பாளர் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், இழுபறி நீடிக்கிறது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
31-மே-202214:54:36 IST Report Abuse
Vijay D Ratnam ராஜ்யசபா எம்பி பதவிக்கு முஸ்லீம் சமுதாயத்துக்கு பிரதிநித்துவம் கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புகிறாராம். ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். திமுக வாக்கு கேட்காவிட்டாலும் கூட இஸ்லாமியர்கள் வாக்குகள் 95 சதவிகித வாக்குகள் அவர்களுக்கு கிடைத்துவிடும். அதுபோலவே கிருஸ்தவர்கள் வாக்குகளும். பள்ளிவாசல்களும் பாதிரியார்களும் உத்தரவிட்டு போடப்படும் வாக்குகள். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் வரை அதிமுகவுக்கு இஸ்லாமிய வாக்குகள் கால் சதவிகிதம் கூட கிடைக்காது. 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பூதவாரியாக செக் செய்து பார்க்கவில்லையா. அதனால் இது போன்ற முட்டாள்தனத்தை அதிமுக செய்ய கூடாது. ஹிந்துக்களின் வாக்குகள் பெரும்பகுதி அதிமுக பாஜக கூட்டணி பக்கம் திரும்பிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் கட்சி சாராமல் இருந்த பெரும்பகுதி ஹிந்துக்கள் பாஜக பக்கம் திரும்பி இருக்கிறார்கள். அதை அதிமுக கெடுத்துக்கொள்ள கூடாது. இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், முக்கால்வாசி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குடும்ப வாக்குகள் ஒருபோதும் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் விழாது. சோ, மைனாரிட்டி வாக்குகளை பிடித்து தொங்கி கொண்டு இருக்காமல் மெஜாரிட்டிக்கு ஆதரவாக நின்றால் அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பிகாஸ் மத்தியில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு குறையாமல் பாஜக ஆட்சிதான் இருக்கும்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-மே-202219:03:06 IST Report Abuse
கல்யாணராமன் சு. முஸ்லிம்ல முக்குலத்தோர் கிடையாதா (கிறிஸ்தவர்களிலே வன்னியர் கிறிஸ்தவர், நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் மாதிரி) ? அப்படி இருந்தாங்க அவங்களை நியமிக்கலாமே ? ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
26-மே-202200:40:56 IST Report Abuse
John Miller எடபாடியிடம் எடுபிடி வேலை பார்ப்பது panneerukku mikavum மகிழ்ச்சியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X